பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இரண்டு திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் இரண்டு திட்டங்களில் திருத்தம் கொண்டுவந்துள்ளது, அதன்படி இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு
ரூ.188 மற்றும் ரூ.187 திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகை கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்லிமிடேட் வாய்ஸ்கால்
இதற்புமுன்பு வரை பிஎஸ்என்எல் ரூ.186 மற்றும் ரூ.187 திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 100எஸ்எம்எஸ், தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ்கால் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

கூடுதல் சலுகையின் படி
தற்சமயம் அந்நிறுவனம் அளிவித்துள்ள கூடுதல் சலுகையின் படி ரூ.186 மற்றும் ரூ.187 திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜபி டேட்டா காலியானதும் இணையத்தின் வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இதே போல்,
பழைய பிளானில் மும்பை, டெல்லி ஆகியவற்றில் ரோமிங் கிடையாது. தற்போது இந்த இரு ரோமிங்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலர் பேக் ரிங் டோன்
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.186 மற்றும் 187 திட்டங்களில் அனைத்து சலுகைகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். ஆனால் ரூ.187 திட்டத்தில் மட்டும் PRBT எனப்படும் காலர் பேக் ரிங் டோன் வழங்கப்படுகிறது. இந்த சேவை பழைய பிளானில் எப்படி இருந்ததோ அதே போல் தான் புதிய பிளானிலும் கொண்டு வரப்பட்டள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.56 திட்டம்
அதேபோல் பிஎஸ்என்எல் தமிழகம் மற்றும் சென்னையில் ரூ.56 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பயனர்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. குறைந்த நாட்கள் வேலிடிட்டியுடன் அதிக டேட்டா பயனர்களுக்கு இது
வழங்குகிறது.

சூப்பர் ஸ்டார் 300 திட்டம்
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த சூப்பர் ஸ்டார் 300 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு, வினாடிக்கு 50 எம்.பி என்ற வேகத்தில்
300ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அன்லிமிடெட் டேட்டா நிறைவடைந்தவுடன் 2 எம்.பி வேகத்தில்
பயனர்களுக்கு டேட்டா சேவை வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications