முடிகிறது சகாப்தம்.. இந்தியா முழுக்க நிறுத்தப்பட உள்ள BSNL-ன் முக்கிய சேவை? கஸ்டமர்கள் என்ன செய்யணும்?
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் - இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டெலிகாம் ஆபரேட்டர் - ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது நாடு முழுவதுமாக அதன் முக்கிய சேவை ஒன்றை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது என்ன சேவை? பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 3ஜி சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் அடிப்படை ஆக - 3ஜி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் பல பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது, இப்போது இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் நேரடி தளங்களை கொண்டுள்ளது.

இதற்கிடையில் லைவ்மின்ட்டின் (LiveMint) ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, நோக்கியா (NOKIA) மற்றும் சீன உபகரண தயாரிப்பாளர் ஆன இஸட்டிஇ (ZTE) போன்ற விற்பனையாளர்களுடனான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்களை (AMC - Annual maintenance contracts) நிறுத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டு உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது அதன் 3ஜி சேவையை நிறுத்துவதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது என்று அர்த்தம்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது சீன சேவைகளை தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து படிப்படியாக அகற்றுமாறு அரசாங்கம் கேட்டு கொண்ட நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஒரு பெரிய வளர்ச்சியாகும், மேலும் இது கடுமையான கேள்விகளையும் எழுப்புகிறது.
4ஜி உடன் போதுமான அலைவரிசை, திறன் மற்றும் கவரேஜ் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உள்ளதா? இந்தா நிறுவனத்தால் முடிந்த வேகத்தில் 3ஜி சேவையை அகற்ற முடியுமா? என்று கேட்டால் - பிஎஸ்என்எல் 3ஜி சேவையின் நிறுத்தம் ஆனது பெரும்பாலும் கட்ட வாரியாக (ஒவ்வொரு கட்டமாக) அகற்றப்படலாம்.
குறிப்பாக முதலில் 4ஜி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படும் பகுதிகளிலிருந்து 3ஜி நீக்கப்படும். இந்த குறிப்பிட்ட பகுதிகலில் 3ஜி-ஐ நீக்குவது மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இப்போதைக்கு சாத்தியம். அரசு நடத்தும் இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் 4ஜி-யில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதில்லை, விரைவில் 5ஜி-ஐயும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக இதுபோன்ற பல நடவடிக்கைகளை நாம் காணலாம்; கேட்கலாம்; எதிர்பார்க்கலாம்!
கஸ்டர்மர்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஏற்கனவே ஒரு 4ஜி கஸ்டமராக இருந்தால், உங்கள் பகுதியில் 4ஜி நெட்வொர்க் கிடைக்கிறது என்றால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒருவேளை 3ஜி இல்லாமல் போனால் 4ஜி மற்றும் அதை தொடர்ந்து 5ஜி க்கு அப்கிரேட் ஆக்கிக்கொள்ளவும். மாறாக 3ஜி பயனராக இருந்தால், 4ஜி அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே 3ஜி காணாமல் போகும். அப்போது முடிந்த வேகத்தில் 4ஜி-க்கு அப்கிரேட் ஆகவும்.
பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகம் எப்போது? இந்த டெலிகாம் நிறுவனம் ஏற்கனவே சுமார் 1 லட்சம் 4ஜி தளங்களில் முதலீடு செய்துள்ளது, இப்போது அதை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிஎஸ்என்எல்லின் 5ஜி நெட்வொர்க் அறிமுகம் ஆனது 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆரம்பத்தில் இது 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மும்பை மற்றும் டெல்லியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் நடக்கவில்லை.
ரூ.251 க்கு அறிமுகமான புதிய பிஎஸ்என்எல் திட்டம்: கடந்த காலத்தில் ரூ.251 என்கிற விலைக்கு பல வகையான (நன்மைகளுடன்) பிஎஸ்என்எல் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைத்துள்ளன. தற்போது இந்நிறுவனம் ரூ.251 திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இப்போது து 100ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதுமட்டுமல்ல இது இன்னும் நிறைய நன்மைகளை வழங்குகிறது
பிஎஸ்என்எல்-ன் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு பிஐடிவி (BiTV) அணுகலையும் வழங்குகிறது. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஓடிடி (ஓவர்-தி-டாப்) தளமாகும்; இதன்கீழ் 450 க்கும் மேற்ப்பட்ட டிவி சேனல்களும் அணுக கிடைக்கும். கூடவே இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது
பிஎஸ்என்எல்-ன் ரூ.251 திட்டம் ஆனது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால் 30 நாட்களுக்கு இலவச பிஐடிவி அணுகல் கிடைக்கும் என்று டெலிகாம்டால்க் வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்திற்க்கான ஒரு நாளைக்கான செலவு வெறும் ரூ.8.96 மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications








