Home
News

இப்போ 200 ஜிபி இல்ல 1000 ஜிபி டேட்டா- வெறும் ரூ.499 விலையில் பிஎஸ்என்எல் அட்டகாச திட்டம்!

சமீபத்திய நடவடிக்கையாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தை முறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது 50 எம்பிபிஎஸ் வேகத்தில் 1 டிபி வரை அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இணைய வரம்பு வேகம் முடிந்த உடன் இந்த சேவை 2 எம்பிபிஎஸ் வேகமாக குறைத்து வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த திட்டத்தில் 200 ஜிபி டேட்டாவை 50 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கியது. ஆனால் தற்போது டேட்டா வரம்பு 1 டிபி ஆக அதிகரித்து வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இலவச குரல் அழைப்பு இணைப்பு நன்மைகளை வழங்குகிறது. இது உண்மையான வரம்பற்ற குரல் அழைப்பு நேரத்தை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 எஃப்டிடிஎச் பிராட்பேண்ட் திட்டமானது 1 டிபி டேட்டாவை வழங்குகிறது. இது குறித்த கேரள டெலிகாம் அறிக்கைப்படி, பிஎஸ்என்எல் தனது பான் இந்தியா ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தை நவம்பர் 2021-ல் நீக்கியது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் கேரளாவில் மட்டும் ரூ.499-க்கு 200 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்தது. தற்போது பிஎஸ்என்எல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தை ஒழுங்குபடுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது 1 டிபி டேட்டா மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் கேரள டெலிகாம் வட்டத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிஎஸ்என்எல் நீண்ட கால செல்லுபடியாகும் திட்டம்

பிஎஸ்என்எல் நீண்ட கால செல்லுபடியாகும் திட்டம்

பிஎஸ்என்எல் நீண்ட கால செல்லுபடியாகும் திட்டங்களை மிகவும் மலிவு விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கான சிறந்த திட்டமாக ரூ.1499 பிஎஸ்என்எல் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் 24 ஜிபி மொத்த டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1499 திட்டமானது மொத்தம் 365 நாட்கள் செல்லுபடியாகும் சலுகையை வழங்குகிறது.

ப்ரீபெய்ட் திட்ட பயனர்களுக்கு புதிய சலுகை

ப்ரீபெய்ட் திட்ட பயனர்களுக்கு புதிய சலுகை

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ப்ரீபெய்ட் திட்ட பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரையறுக்கப்ட்ட கால ஆஃபர் உடன் வருகிறது. இந்த திட்டம் ஜனவரி 15 2022 வரை செல்லுபடியாகும். இந்த சலுகையான பயனர்களின் ப்ரீபெய்டு திட்டத்துடன் கூடுதலாக 90 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சலுகையான அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் பொருந்தாது, உயர் மதிப்பிலான வவுச்சரை பலர் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி

90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் வருகிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆனது அதன் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை கூடுதல் 90 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. பொதுவாக இந்த திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. தற்போது சலுகையிந் கீழ் பயனர்கள் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டியை பெறுவீர்கள். இந்த புதிய சேவையின் செல்லுபடியாகும் காலம் 455 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. சுமார் 15 மாதங்கள் வரை இந்த திட்டம் செல்லுபடியாகிறது.

தினசரி 3 ஜிபி டேட்டா

தினசரி 3 ஜிபி டேட்டா

ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. எனவே இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் டேட்டா குறித்த கவலைப்பட தேவையில்லை, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் தற்போது நாட்டில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றன. தொடர்ந்து பிஎஸ்என்எல் திட்டங்கள் தனது பேக்குகளை கவர்ச்சிகரமாக சலுகைகளை மாற்றி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் 24 ஜிபி மொத்த டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1499 திட்டமானது மொத்தம் 365 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Renewed its Rs.499 Broadband plan: Now its Offer 1000GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X