அவசர அவசரமாக ரீசார்ஜ் செய்யும் BSNL பயனர்கள்! 3 ஸ்பெஷல் பிளான்கள் இன்றுடன் நிறுத்தம்!

|

நீங்களொரு BSNL பயனர் என்றால் நாளை முதல் (அதாவது நவம்பர் 16 ஆம் தேதி முதல்) குறிப்பிட்ட 3 ஸ்பெஷல் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய முடியாது!

ஏனென்றால், அந்த 3 திட்டங்களும் இன்று (அதாவது நவம்பர் 15 ஆம் தேதியோடு) நிறுத்தப்படுகிறது!

அதென்ன திட்டங்கள்? அதன் விலை விவரங்கள் என்ன? அது வழங்கும் நன்மைகள் என்ன? அவைகள் ஏன் நிறுத்தப்படுகிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

கவனமாக நினைவில் வைத்து கொள்ளவும்!

கவனமாக நினைவில் வைத்து கொள்ளவும்!

நீங்கள் ஏற்கனவே ஒரு BSNL வாடிக்கையாளராக இருந்தாலும் சரி அல்லது இனிமேல் தான் BSNL சேவைக்குள் இணைய போகிறீர்கள் என்றாலும் சரி.. கீழ்வரும் 3 திட்டங்களையும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவும்.

அப்போது தான் அதை ரீசார்ஜ் செய்யாமல் இருப்பீர்கள்; குறிப்பாக புதிதாக சேரவுள்ள பயனர்கள், நீக்கப்பட்ட திட்டங்களின் நன்மைகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் அது ரீசார்ஜ் செய்ய கிடைக்காமல் ஏமாற்றம் அடைய வேண்டாம்!

பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!

அதென்ன திட்டங்கள்?

அதென்ன திட்டங்கள்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் பாரத் ஃபைபர் சேவையின் (Bharat Fibre) கீழ் வழங்கி வந்த மூன்று பிராட்பேண்ட் திட்டங்களை இன்று முதல் (நவம்பர் 15) நிறுத்த போகிறது.

இந்த திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், இவை அனைத்துமே ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தின் கீழ் மட்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைத்தன. தற்போது "அந்த காலம்" முடிவுக்கு வந்துள்ளது!

அந்த 3 திட்டங்களின் விலை விவரங்கள் என்ன?

அந்த 3 திட்டங்களின் விலை விவரங்கள் என்ன?

நாம் இங்கே பேசுவது - பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவையின் கீழ் ஸ்பெஷல் ரீசார்ஜ்களாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.275 திட்டங்கள் (ஒரே விலையிலான 2 திட்டங்கள்) மற்றும் ரூ.775 திட்டத்தை பற்றித்தான்!

இந்த மூன்று திட்டங்களுமே நாளை முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது என்பதால், இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்கள் இன்றே (நவ.15) அதை செய்து விடவும்!

Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!

ஒரே விலையிலான (ரூ.275) இரண்டு BSNL திட்டங்களின் நன்மைகள்:

ஒரே விலையிலான (ரூ.275) இரண்டு BSNL திட்டங்களின் நன்மைகள்:

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.275 மதிப்புள்ள அதன் இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களையுமே இன்றுடன் நிறுத்துகிறது.

நன்மைகளை பொறுத்தவரை, ரூ.275 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த 2 திட்டங்களுமே 3.3டிபி என்கிற மாதாந்திர டேட்டா நன்மையை வழங்குகின்றன.

குறிப்பிட்ட டேட்டா லிமிட்-ஐ அடைந்த பிறகு இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும். மேலும், இந்த இரண்டு திட்டங்களுமே இலவச வாய்ஸ் கால் நன்மையையும் வழங்கும்.

இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

BSNL-இன் இரண்டு ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒன்று 30 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது. மற்றொன்று 60 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது.

ஆனாலும் கூட இந்த இரண்டுமே 75 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகின்றன. அதாவது வாடிக்கையாளர்கள் உள்ள பகுதியில் எந்த அளவிலான இன்டர்நெட் ஸ்பீட் கிடைக்கிறதோ, அதை பொறுத்து அவர்களுக்கான ரீசார்ஜை நிகழ்த்தி கொள்ளலாம்!

உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?

பிஎஸ்என்எல் ரூ.775 திட்டத்தின் நன்மைகள்:

பிஎஸ்என்எல் ரூ.775 திட்டத்தின் நன்மைகள்:

BSNL நிறுவனத்தின் பிராட்பேண்ட் பிரிவில் இருந்து நீக்கப்பட்ட மூன்றாவது திட்டம் - 150 Mbps என்கிற அளவிலான இணைய வேகத்தை வழங்கும் ரூ.775 ஆகும்.

இது 2TB என்கிற மாதாந்திர டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் முடிந்ததும், இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 10 Mbps ஆக குறைக்கப்படும்.

டேட்டா நன்மைகள் மட்டும் தானா?

டேட்டா நன்மைகள் மட்டும் தானா?

ரூ.775 ஆனது டேட்டா நன்மைகளோடு சேர்த்து பல வகையான OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளையும் வழங்கும். அதாவது இது Disney+ Hotstar, Lionsgate, Hungama, SonyLIV, ZEE5, Voot மற்றும் YuppTV போன்ற தளங்களுக்கான சந்தாவை வழங்கும்.

ரூ.775 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் - 75 நாட்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டமும் கூட நாளை (நவ.16) முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது!

Best Mobiles in India

English summary
BSNL removing 3 special recharges from its bharat fibre broadband plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X