Home
News

ஆரம்பமே அசத்தலா இருக்கே.. ரூ.1 க்கு BSNL நியூ இயர் ஆபர்.. டிச.31 குள்ள எப்போ வேணா ரீசார்ஜ் பண்ணலாம்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் உண்டான "செம்ம டிமாண்ட்" காரணமாக, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது ரூ.1 ஃப்ரீடம் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை வருகிற 2026 புத்தாண்டுக்கான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முதல் ஆபர் என்றும் குறிப்பிடலாம்.

ஏனென்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும், 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். ரூ.1 க்கு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்குவதன் மூலம் பயனர்கள் இந்த சலுகையை பெறலாம். ஆக இந்த சலுகை புதிய பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையின் கீழ் உள்ள பயனர்கள் இந்த ரூ.1 சலுகைக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

ஆரம்பமே அசத்தலா இருக்கே.. ரூ.1 க்கு BSNL நியூ இயர் ஆபர்!

நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.1 ஃப்ரீடம் திட்டம் ஆனது 30 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் ரூ.1 ரீசார்ஜ் மூலம், பயனர்கள் தினசரி 2 ஜிபி அதிவேக (4ஜி) டேட்டா, இந்தியா முழுவதும் வரம்பற்ற லோக்கல் மற்றும் நேஷனல் ரோமிங் கால்களை ஆகியவற்றையும் பெறுகிறார்கள். கூடுதலாக, பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள்.

வெறும் ரூ.1 க்கு கிடைப்பதால், 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வரும் இந்த திட்டத்தை ஒரு இலவச திட்டம் என்றே கூறலாம். வெறும் ரூ.1 க்கு உண்மையான டிஜிட்டல் சுதந்திரத்தை பெறுவார்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுவதால் தான், இது ஃப்ரீடம் பிளான் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஃப்ரீடம் திட்டம் முதலில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை என்கிற காலக்கட்டத்திற்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஃப்ரீடம் திட்டத்தின் செல்லுபடியை 15 நாட்களுக்கு நீட்டித்தது, அதாவது செப்டம்பர் 15, 2025 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவித்து இருந்தது.இப்போது டிசம்பர் 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ஸ்டூடெண்ட் ஸ்பெஷல் பிளானையும் அறிமுகம் செய்து இருந்தது. அதன் விலை ரூ.251 ஆகும். 2025 குழந்தைகள் தினத்தன்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், பிஎஸ்என்எல்-ன் மற்ற ஸ்பெஷல் திட்டங்களை போலவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றுப்படி ரூ.251 ஸ்டூடெண்ட் ஸ்பெஷல் பிளான் ஆனது 2025 டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்கின் கீழ் 100ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ரூ.250 க்கு பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க்கின் கீழ் 100ஜிபி டேட்டா கிடைப்பது உண்மையிலேயே அற்புதமான ஆபர் ஆகும். இது குறித்த அறிவிப்பில் " இந்த பெரிய டேட்டா லோலட் திட்டம் ஆனது 28 நாட்களுக்கு 100ஜிபி வரையிலான டேட்டா பயன்பாட்டை வழங்கி - உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி மொபைல் நெட்வொர்க்கை அனுபவிக்க மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது" என்று பிஎஸ்என்எல்-ன் சிஎம்டி ராபர்ட் ஜே ரவி கூறியுள்ளார்.

மேலும் "புதிய பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா சேவைகளை அவர்கள் (மாணவர்கள்) அனுபவித்த உடன், பிஎஸ்என்எல்-ன் சிறந்த சேவை தரம் மற்றும் கவரேஜை உறுதி செய்வதன் வழியாக, அவர்கள் எங்களுடன் நீண்ட காலம் தொடர்வார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் ராபர்ட் ஜே ரவி கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL relaunched Rs 1 Freedom Plan With Free 4G SIM Card Available Un till December 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X