மீண்டும் ஒரு வருடம் செல்லுபடியாகும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்.

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அருமையான சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,999

ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,999

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம்தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு வருடம் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தைமீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,999-ஆகும்.

தினசரி 3ஜிபி டேட்டா

தினசரி 3ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கும், பின்பு வரம்பு முடிந்ததும் 80 கி.பி.பி.எஸ் வேகத்தைக் குறைத்து இணையத்தை பயன்படுத்த முடியும். அதன்பின்பு இந்ததிட்டத்தில் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வரை அழைப்பு நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். இது தவிர, பயனர்கள் வரம்பற்ற பாடல் மாற்றத்துடன் இலவச பிஆர்பிடி மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கான சோனிலிவ் சந்தாவைப் பெறுவார்கள்
என்று டெலிகாம் டாக் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ.1,188 மருதம்

ரூ.1,188 மருதம்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் முன்பு ரூ.1,188 மருதம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற குரல் அழைப்புகள், 5ஜிபி டேட்டா, 1200எஸ்எம்ஸ் ஆகியவை 345நாட்கள் செல்லுடிபடியாகும் வண்ணம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது இதே திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 365நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வழங்கப்படுகிறது.


மேலும் பிஎஸ்என்எல் நிறவனம் இப்போது ரூ.1,188 மருதம் திட்டத்தில் வழங்கியுள்ள சலுகையானது 2020 ஜனவரி 16 ஆம் தேதியுடன் முடிவடையும் எனக் கூறப்பட்டுள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2020 ஜனவரி 16 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் முன்பு அறிமுகம் செய்த சிறிய சிறிய திட்டங்களைப் பார்ப்போம்.

டிசம்பர் 1 சரியான நாள்: செல்போன், டிவி முதல் மிக்ஸி வரை அட்டகாச தள்ளுபடி!டிசம்பர் 1 சரியான நாள்: செல்போன், டிவி முதல் மிக்ஸி வரை அட்டகாச தள்ளுபடி!

பிஎஸ்என்எல்: ரூ.7 மற்றும் ரூ.16 திட்டங்களின் நன்மைகள்

பிஎஸ்என்எல்: ரூ.7 மற்றும் ரூ.16 திட்டங்களின் நன்மைகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் data voucher போர்ட்ஃபோலியோவில் இருக்கும் முதல் திட்டம் ரூ.7-ஆகும். இந்த ரூ7-மதிப்புள்ள மினிபேக் திட்டமானது 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் ஒரு நாள் ஆகும்.

அடுத்து ரூ.16-மினி பேக் திட்டமானது 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, இதன் செல்லுபடியாகும் காலம் ஒருநாள் என்பது
குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.56-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.56-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.56 திட்டமானது C_DATA56 டேட்டா வவுச்சர் என்கிற பெயரின் கீழ் ரூ.56 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது,இந்த திட்டத்தின் நன்மைகள் பொறுத்தவரை எழு நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் 1.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது.அதாவது நீங்கள் உங்களின் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அனுபவிக்கும் 1.5ஜிபி அளவிலான டேட்டாவுடன்
சேர்த்து கூடுதலாக 1.5 ஜிபி என மொத்தம் 3 ஜிபி டேட்டாவை பெறமுடியும்.

பிஎஸ்என்எல் ரூ.98 மற்றும் ரூ.197-திட்டங்கள்

பிஎஸ்என்எல் ரூ.98 மற்றும் ரூ.197-திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் DataTsunamiதிட்டமாக ரூ.98 திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி அளவிலான டேட்டாவைபெறமுடியும். டேட்டா வரம்பு முடிந்துபின்னர் 40கே.பி.பி.எஸ் என்ற இணைய வேகம் குறைக்கப்படும். பின்பு இந்ததிட்டத்தின் கீழ் EROS NOWபொழுதுபோக்கு சேவைகளும் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 24நாட்கள்
ஆகும். இதே திட்டத்தை போலவே ரூ.197-மதிப்புள்ள DATASTV__197 திட்டமும் அணுக கிடைக்கும். இந்த ரூ.197-திட்டத்தில் தினசரி
2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கிறது, பின்பு இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 54நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL reintroduces Rs 1,999 prepaid plan with one year validity : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X