BSNL பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.. இப்படி ரீசார்ஜ் செய்தால் 'அசல்' விலையிலிருந்து சலுகை உண்டு..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல் - BSNL) தனது மொபைல் செயலியான செல்ஃப்கேர் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையைக் குறைக்கிறது. BSNL சில மாதங்களுக்கு முன்பு Selfcare மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. மேலும், இது Vodafone Idea (Vi) மொபைல் செயலியைப் போலவே தோற்றமளிக்கிறது. மார்ச் 31, 2022 வரை செல்ஃப்கேர் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யப்படும் பயனர்களின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு 4% தள்ளுபடி வழங்கப்படும் என்று BSNL தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

BSNL பயனர்களுக்குக் கிடைக்கும் புதிய ரீசார்ஜ் சலுகை
ரூ. 201 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள திட்டங்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் சலுகை பொருந்தும் என்பதை BSNL வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ளவும். இந்தச் சலுகை Selfcare ஆப் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள் பிளே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பல போன்ற மூன்றாம் தரப்பு மொபைல் பயன்பாடுகள் மூலம் ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு இது வழங்கப்படாது என்பது கவனிக்கத்தக்கது. BSNL இணையதளத்தில் பயனர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு திட்டமும் BSNL Selfcare பயன்பாட்டில் கிடைக்கும்.

BSNL வழங்கும் ரூ. 201 திட்டத்தின் மேல் எவ்வளவு சலுகை கிடைக்கிறது?
உண்மையைச் சொல்லப் போனால், இது ஒரு பெரிய தள்ளுபடி இல்லை என்றாலும் கூட, BSNL பயனர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கிடைக்கும் சலுகையை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். BSNL நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி, ரூ. 201 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள திட்டங்களுக்குச் சலுகை கிடைக்கிறது. BSNL வழங்கும் ரூ. 201 திட்டத்தில் 4% சலுகை கிடைக்கும் போது, உங்களுக்கு ரூ. 8.04 மட்டுமே சலுகை நன்மையாகக் கிடைக்கும் என்பதால், மொபைல் ஆப் மூலம் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்வது மிக உயர்ந்த ஊக்கச் சலுகையாக இல்லை.

BSNL நிறுவனத்தின் உண்மை உத்தி என்ன?
இவ்வளவு சிறிய தொகையைச் சேமிக்க மக்கள் அதிக உத்வேகத்துடன் இருக்க மாட்டார்கள் என்பது நம்முடைய கருத்து. இந்த சலுகை விளம்பரம் உண்மையில், BSNL Selfcare இன் போர்ட்டலுக்கு அதிகமான பயனர்களைக் கொண்டு வருவதற்கான நிறுவனத்தின் உத்தியாகும். இதில் ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் செயலி உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் உட்பட அனைவரையும் ஈர்க்க BSNL மேற்கொண்ட முயற்சி தான் இது. BSNL Selfcare ஆனது iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர் கொண்ட BSNL Selfcare
BSNL Selfcare ஆனது Google Play Store இல் 4.4 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் ஏற்கனவே இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அதிக டேட்டாவை பயன்படுத்தாத மிக இலகுவான பயன்பாடு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆப்ஸ் மூலம், பிஎஸ்என்எல் பயனர்கள் ரீசார்ஜ் செய்தல், இருப்பைச் சரிபார்த்தல், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ரீசார்ஜ்களை நிர்வகித்தல் மற்றும் பலவற்றைச் செய்ய முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

4% தள்ளுபடி மக்களைக் கவருமா?
BSNL பயனர்கள் பழைய My BSNL செயலியிலிருந்து BSNL Selfcare செயலிக்கு மாற வேண்டும் என்று BSNL விரும்புகிறது. ஆனால் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்ற தந்திரங்களை முயல வேண்டும், ஏனெனில் 4% தள்ளுபடி அதன் பயனர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. வருங்காலத்தில் BSNL நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவரக்கூடிய மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்தால், நிறுவனம் எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைய முடியும்.


Click it and Unblock the Notifications