திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து 3திட்டங்களை வாபஸ் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனம்.!

|

அன்மையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் விலைகளை உயர்த்தி புதிய திட்டங்களை அறிவித்தது, இதற்கு நாடு முழுவதும் அதிகளவு விமர்சனங்கள் வரத்தொடங்கிவிட்டது. குறிப்பாக ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வுக்கு சற்று விமர்சனம் அதிகமாகத்தான் உள்ளது.

 பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

இந்நிலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய கட்டணங்களைஎப்போது அறிவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியை குறைத்த கையோடு, மூன்று அட்டகாசமான திட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளது.

 ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

கடந்த அக்டோபர் மாதம் ஜியோ நிறுவனம் தனது சாசெட் பேக்குகளான ரூ.19 மற்றும் ரூ.52-திட்டங்களை நீக்கியது, தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு திட்டங்களின் சலுகைகளை குறைத்துள்ளது.

பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா? சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்!பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா? சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்!

பிஎஸ்என்எல் வேலிடிட்டி குறைக்கப்பட்ட திட்டங்கள்

பிஎஸ்என்எல் வேலிடிட்டி குறைக்கப்பட்ட திட்டங்கள்

பிஎஸ்என்எல் வேலிடிட்டி குறைக்கப்பட்ட திட்டங்கள் ரூ.29 மற்றும் ரூ.47 ஆகும். அதன்படி ரூ.29எஸ்.டி.வி ஆனது வரம்பற்ற ஆஃப்நெட் மற்றும் ஆன்-நெட் குரல் அழைப்புகள் (தினசரி 250 நிமிடங்கள் என்கிற வரம்புடன்),1 ஜிபி அளவிலான டேட்டா மற்றும்300 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை ஒரு வாரத்திற்கு (7நாட்கள்) வழங்கியது, ஆனால் சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகுஇந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

 ரூ.47 எஸ்.டி.வி திட்டம்

அதேபோல் ரூ.47 எஸ்.டி.வி திட்டம் ஆனது இப்போது வரம்பற்ற குரல் அழைப்பு (ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள்) 1 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை ஏழு நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாபஸ் பெறப்பட்ட 3திட்டங்கள்

வாபஸ் பெறப்பட்ட 3திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மூன்று எஸ்டிவி.களையும் அதன் ப்ரீபெய்ட் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அந்த திட்டங்கள் ரூ.7, ரூ.9 மற்றும் ரூ.192 ஆகும். ரூ.7 திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வழங்கு திட்டம் ஆகும். அதேபோல் ரூ.9-திட்டமானது 250நிமிடங்கள் என்கிற வரம்பு கொண்ட இலவச அழைப்புகள் மற்றும் 100எம்பி அளவிலான டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிய திட்டமாகும்.

 ரூ.192-எஸ்.டி.வி

கடைசியாக ரூ.192-எஸ்.டி.வி திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் (ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள்), 3ஜிபி அளவிலான தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் 28நாட்களுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில நாட்களில்

அடுத்த சில நாட்களில்

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய கட்டணத் திட்டங்களை இன்னமும் மதிப்பீடு செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் அடுத்த சில நாட்களில் அல்லது அடுத்த வாரத்தில் திருத்தப்பட்ட புதிய திட்டங்களை அறிவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Reduces Validity of Rs 29 and Rs 47 Prepaid Plans, Also Withdraws 3 STVs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X