எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. சத்தமின்றி BSNL மலிவு விலை திட்டத்தின் வேலிடிட்டி குறைப்பு.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை தான் குறைத்துள்ளது. தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் எவ்வளவு நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் மற்றும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 197 Prepaid Plan) ஆனது முன்பு 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.197 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 35 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு இப்போது ரூ.5.63 ஆகும்.
குறிப்பாக 300 நிமிட அழைப்பு நன்மைகள் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர 5ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் 5ஜி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
மலிவு விலையில் வேலிடிட்டி நன்மையை மட்டுமே எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களையும் இங்கே பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 180ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மை கிடைக்காது.


Click it and Unblock the Notifications








