BSNL Marutham Prepaid Plan அடுச்சது 'லக்', ஆனா கொஞ்சம் சேதாரமும் இருக்கு!
பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில் மருதம் என்ற புதிய ரூ.1,188 திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 2020ம் ஆண்டின் துவக்கம் வரை மட்டுமே பயனர்களுக்குக் கிடைக்குமென்று அறிவித்திருந்தது. ஆனால் தற்பொழுது பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்த மருதம் திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இதன் கிடைக்கும் காலத்தையும் நீடித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் மருதம் திட்டம்
சென்னை மற்றும் தமிழக தொலைத் தொடர்பு வட்டாரங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், இந்த மருதம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்த இந்த திட்டம், ஜனவரி 21ம் தேதி 2020 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்யக் தமிழகத்தில் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது.

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு அடுச்சது 'லக்'
ஆனால் தற்பொழுது பி.எஸ்.என்.எல் நிறுவனம் இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, இதன் கிடைக்கும் காலத்தை 90 நாட்கள் நீடித்துள்ளது. புதிய பி.எஸ்.என்.எல் அறிவிப்புப்படி இந்த மருதம் திட்டமானது மார்ச் 31ம் தேதி 2020 வரை ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லக் அடுச்சாலும் கொஞ்சம் சேதாரமும் இருக்கு!
பி.எஸ்.என்.எல் மருதம் திட்டத்தின் விலையில் நிறுவனம் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை, ஆனால் முன்பு வழங்கப்பட்டு வந்த 345 நாள் வேலிடிட்டி காலத்திலிருந்து 45 நாட்கள் குறைக்கப்பட்டு, இனிமேல் வெறும் 300 நாட்கள் வேலிடிட்டியுடன் மட்டுமே இந்த மருதம் திட்டம் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

மலிவான நீண்டகால திட்டம்
பி.எஸ்.என்.எல் மருதம் திட்டமானது அடிப்படை பயனர்களை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல்-ன் நீண்டகால திட்டமான ரூ.1,999 மற்றும் ரூ.1,699 திட்டங்களைப் போன்று தினசரி டேட்டா நன்மைகளை வழங்குவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் தற்பொழுதுள்ள பயனர்கள் மற்றும் புதிய பயனர்களுக்கான முதல் ரீசார்ஜ் விருப்பமாகக் கிடைக்கிறது.

மருதம் திட்டத்தின் நன்மைகள்
பிஎஸ்என்எல்-ன் இந்த மருதம் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க்கு அழைப்புகளுக்கான 250 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இத்திட்டத்தின் கீழ் 5 ஜிபி டேட்டா மற்றும் 1000 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 300 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் கிடைக்கும் நீண்டகால திட்டங்களின் விலையை விட இந்த மருதம் திட்டம் மிக மலிவானது.


Click it and Unblock the Notifications








