Home
News

சத்தமின்றி நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி-ஐ குறைத்த BSNL: முழு விவரம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் அடுத்த வருடம் 5ஜி சேவையை கூட இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரிபெய்ட் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதேபோல் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்திற்குப் பதிலாக ரூ.155 திட்டத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக சத்தமில்லாமல் கட்டண உயர்வை அறிவித்தது ஏர்டெல் நிறுவனம். இதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனமும் சத்தமில்லாமல் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களில் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது.

சத்தமின்றி நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி-ஐ குறைத்த BSNL.!

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.107, ரூ.197, ரூ.397 மற்றும் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி-ஐ தான் குறைத்துள்ளது. குறிப்பாக இந்த திட்டங்கள் மிகவும் பிரபலமான திட்டங்கள் ஆகும். மேலும் இப்போது இந்த திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை சற்று விரவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 40 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 35 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு 3ஜிபி டேட்டா, 200 நிமிடங்கள் வாய்ஸ் கால், பிஎஸ்என்எல் ட்யூன்கள் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்.

சத்தமின்றி நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி-ஐ குறைத்த BSNL.!

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. தற்போது இந்த திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 70 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள்ää தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. தற்போது இந்த திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 150 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ், இலவச PRBT சேவை மற்றும் லோக்துன் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.

சத்தமின்றி நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி-ஐ குறைத்த BSNL.!

பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. தற்போது இப்போது திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 300 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கும்.

பின்பு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ், இலவச PRBT சேவை மற்றும் லோக்துன் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இதில் வழங்கப்படும் நன்மைகள் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 300 நாட்கள் ஆகும்.

சத்தமின்றி நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி-ஐ குறைத்த BSNL.!

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் குறைந்த விலையில் அருமையான திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் 4ஜி சேவையை மட்டும் இந்நிறுவனம் சீக்கிரம் கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Reduces Validity of Four Prepaid Plans: Full Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X