Home
News

BSNL சத்தமில்லாமல் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது.. எந்தெந்த திட்டங்கள்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தற்போது இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைக் குறைத்துள்ளது. அதாவது ரூ.2399 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்ககளின் நன்மைகளைத் தான் குறைத்துள்ளது. அதாவது இந்த இரண்டு திட்டங்களும் முன்பு அதிக நாள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டங்களின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 425 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 395 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

BSNL இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது..

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan) ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை விரும்பும் பயனர்கள் இதை தேர்வு செய்வது நல்லது. மேலும் பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 979 Prepaid Plan) 160 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

Best Mobiles in India

English summary
BSNL reduced the validity of its Rs. 1499 and Rs. 2399 plans: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X