தனி ஒருவன் Bsnl.. லட்சக்கணக்கில் புதிய பயனர்கள்.. 4ஜி ரெடி.. 5ஜி சோதனை துவக்கம்.. கவலையில் ஜியோ..
பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் தொடர்ந்து பல புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதாவது இந்தியாவில் முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். பின்பு விரைவில் நாடு முழுவதும் 4ஜி (4G) சேவை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். அதேபோல் சென்னை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்னும் சில மாதங்களில் 5ஜி (5G) சோதனையைக் கூட தொடங்க உள்ளது பிஎஸ்என்எல்.
இந்நிலையில் ஜூலை மாதத்தில் மட்டும் அதிக மக்கள் பிஎஸ்என்எல் இணைப்புகளைப் பெற்றுள்ளனர். அதாவது கடந்த ஜூலை மாதம் ஆந்திரப் பிரதேசத்தில் 2.17 லட்சம் புதிய இணைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது என பிஎஸ்என்எல் ஆந்திரப் பிரதேசம் X (ட்விட்டர்) தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் முக்கியமான திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 25 சதவீதம் வரை கட்டணத்தை அதிகரித்தது. இதனால் பல்வேறு மக்கள் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அதுவும் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகங்களில் புதிய இணைப்பினை பெறுவதற்காக ஏராளமானவர்கள் வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
அதேபோல் கடந்த மாதம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 80,000-க்கும் அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் இணைப்புகளைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஜூலை 30ஆம் தேதி நிலவரப்படி திருச்சியில் 16500 பேர் புதிதாக பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர். மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் புதிதாக 17000 பேர் பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர். பின்பு கோயம்புத்தூரில் சுமார் 12,000 பேர், சென்னையில் 40,000 பேர் பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர்.
கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கப்பட உள்ளதால் இப்போதே மற்ற நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இணைந்து வருகின்றனர். மேலும் இந்நிறுவனத்தின் 5ஜி சோதனையும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 269 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
வரம்பற்ற நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளன. மேலும் Arena மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல் (Astrotell), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் . மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்திலும் கூடுதல் நன்மைகள் மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கவில்லை பிஎஸ்ன்எல் நிறுவனம். இதுபோன்ற பல அசத்தலான திட்டங்களை கம்மி விலையில் தற்போது வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








