Home
News

BSNL-க்கு கும்பிடு.. மாதம் ரூ.150 போதும்.. 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 32GB டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களை பார்த்து ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி மாதத்துக்கு ரூ.150 செலவில் 300 நாட்கள் (300 Days) வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ரூ.1499 (BSNL Recharge Rs 1499): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை 10 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம். 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 1 மாதம் அல்லது 30 நாட்களுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால் ரூ.149.9ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.150 மாத செலவில் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ்களை பெறலாம்.

BSNL-க்கு கும்பிடு.. மாதம் ரூ.150 போதும்.. 300 நாட்கள் வேலிடிட்டி!

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 10 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கும். இதில் லோக்கல் (Local) முதல் எஸ்டிடி, ரோமிங் கால்கள் (STD, Roaming Calls) வரையில் அனைத்து நெட்வொர்க்கிலும் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுத்து இருக்கிறது.

மற்ற நிறுவனங்களில் இதுபோன்ற மலிவான வருடாந்திர திட்டங்களில் எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடைக்காது. மொத்தமாக கொடுக்கப்பட்டுவிடும். இந்த லிமிட்டுக்கு மேல் சென்றால், கட்டணம் செலுத்தி அனுப்ப வேண்டி இருக்கும். இதில் தினசரிக்கு கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகையை தினசரிக்கு பயன்படுத்த முடியாது.

10 மாதங்களுக்கும் மொத்தமாகவே 32 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படாது. 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை கொடுக்கப்படும். இந்த சலுகைகளை மட்டுமே இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டம் கொடுத்துள்ளது. இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது.

இது 150 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும். ஆகவே, 5 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். ஆனால், இதில் தினசரிக்கு டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, முந்தைய திட்டத்தைவிட கூடுதலாக டேட்டா இதில் கிடைக்கும். விலையும் மலிவாகவே இருக்கும்.

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ரூ.997 (BSNL Recharge Rs.997): 150 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்யலாம். லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுத்துள்ளது. 150 நாட்களுக்கு மொத்தமாக 300 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட அதிகமாகும்.

அதேபோல 2 ஜிபி டேட்டா முடிந்த உடனேயே 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை தொடர்ந்து பெற்று கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 150 நாட்கள் அல்லது 300 நாட்கள் வேலிடிட்டிக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதேபோல டேட்டாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதாவது, முந்தைய திட்டத்தில் வேலிடிட்டி 300 நாட்கள் கிடைத்தாலும், மொத்தமாகவே 32 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் 150 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும் 300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, வேலிடிட்டி முக்கியம் என்றால், முதலாவது திட்டம், டேட்டா முக்கியம் என்றால், இந்த திட்டம் சரியாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Recharge Rs 1499 With Unlimited Voice Calls 40 Kbps After 32GB Data 300 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X