2025: ஒரே BSNL ரீசார்ஜ்.. 425 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது 2025-இல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்ன்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது 425 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2099 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2099 Prepaid Plan) ஆனது 425 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் 395 நாட்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும், அடுத்த 30 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தினமும் 2ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ரூ.2099 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டம் மூலம் பெறமுடியும். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்ய திட்மிட்டுள்ளது இந்நிறுவனம். குறிப்பாக 4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் அனைத்து உபகரணங்களும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் "பூரண சுதேசி" (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும். இது இந்திய தொலைத் தொடர்புத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








