சொல்லி அடிக்கும் BSNL.. கம்மி விலையில் தினமும் 3GB டேட்டா.. 84 நாள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்..
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளன என்று தான் கூறவேண்டும்.
அதேபோல் இன்னும் சில மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் தனது 4ஜி சேவையை வழங்க உள்ளது. பின்பு இந்நிறுவனத்தின் 5ஜி சேவை ஆனது வரும் 2025-ம் ஆண்டு அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். கம்மி விலையில் அதிக அதிக டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கும் சில பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 228 plan) ஆனது ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ வழங்கப்படுகிறது. அதேபோல் Arena மொபைல் கேமிங் சேவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டமும் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 298 plan) தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. மேலும் இந்த ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 299 plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 347 plan) ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை இதில் உள்ளது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 399 plan) ஆனது 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 499 plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் போன்ற பல சிறப்பான நன்மைகள் இதில் உள்ளன. மேலும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 599 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் இதில் கிடைக்கிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








