Home
News

கெத்து காட்டும் BSNL: 425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்! ரூ.397 விலையில் கூட நீண்டகால திட்டமா?

உங்கள் ரீசார்ஜ் திட்டங்களை மீண்டும் - மீண்டும் ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு நிம்மதியைத் தரக்கூடும். காரணம், குறைவான விலையில் அதிக நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை நமது அரசங்கத்திற்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இப்போது வழங்குகிறது. நீண்ட நாள் திட்டம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் இது வெறும் 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என்று தவறாக நினைக்காதீர்கள். இந்த திட்டம் 425 நாட்களுக்குச் செல்லுபடியாகும் உண்மையான நீண்ட கால திட்டமாகும்.

425 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ரீசார்ஜ் திட்டமா?

425 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ரீசார்ஜ் திட்டமா?

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இப்போது 425 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கூடிய ரீசார்ஜ் திட்டம் உட்பட நீண்ட கால திட்டங்களை வழங்குகிறது. இவ்வளவு நீண்ட கால வேலிடிட்டியை வழங்கும் வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. BSNL 425 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை ரூ. 2500 விலைக்கு வழங்குகிறது. இது போன்ற பல நீண்ட கால வேலிடிட்டி திட்டங்களை BSNL வழங்குகிறது. அதைப் பற்றி நீங்கள் கருத்தில் கொள்ள விரும்பும் அத்தகைய திட்டங்களின் பட்டியல் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளது.

கம்மி விலையில் நீண்ட கால செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் திட்டங்கள்

கம்மி விலையில் நீண்ட கால செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் திட்டங்கள்

BSNL வழங்கும் ரூ. 397 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நீண்ட கால திட்டமாகும். வெறும் 397 ரூபாயில் நீண்ட கால திட்டமா என்று நீங்கள் சந்தேகிக்கலாம். உண்மையில் இப்படி ஒரு திட்டம் BSNL இடம் உள்ளது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச ரிங்டோன்கள் ஆகியவை கிடைக்கிறது. இந்தத் தொகுப்பின் ஒட்டுமொத்த செல்லுபடியாகும் காலம் 300 நாட்கள் ஆகும்.இத்துடன் இலவசங்களுக்கான 30 நாள் அணுகல் ஆகியவை கிடைக்கிறது.

இப்படி ஒரு திட்டத்தை இதுவரை எந்த டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லையா?

இப்படி ஒரு திட்டத்தை இதுவரை எந்த டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லையா?

ரூ. 500க்கு கீழ் உள்ள பேக்கேஜில், வேறு எந்த டெலிகாம் நிறுவனமும் இந்தியாவில் 300 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை டேட்டா மற்றும் அழைப்பு நன்மையுடன் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில், உங்களின் பாக்கெட் பணத்திற்குப் பங்கம் விளைவிக்காத திட்டத்தை தேடுகிறீர் என்றால், இந்த ரூ. 397 திட்டம் உங்களுக்கான சிறந்த தேர்வு ஆகும். இதேபோல், BSNL இடம் இன்னும் என்ன அற்புதமான திட்டங்கள் எல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

ரூ. 1999 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ரூ. 1999 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன?

அடுத்தபடியாக, நாம் பார்க்கப் போவது BSNL வழங்கும் ரூ. 1999 திட்டம் ஆகும். இது உண்மையில் ஒரு முழு தொகுப்பு போன்றது. இந்த திட்டம் உங்களுக்கு 500 ஜிபி நிலையான தரவு மற்றும் 100 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் வருகிறது. அதன் பிறகு வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைகிறது. FUP கட்டுப்பாடுகள் இல்லாமல், எந்த நெட்வொர்க்கிற்கும் நீங்கள் பேசி மகிழ வரம்பற்ற தொலைப்பேசி அழைப்புகளைச் செய்ய இது உங்களை அனுமதிக்கிறது. அனைத்து நெட்வொர்க்கிற்கும் செல்லுபடியாகும் 100 தினசரி எஸ்எம்எஸ் நன்மையையும் இது வழங்குகிறது.

இத்துடன் இலவசமாக கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இத்துடன் இலவசமாக கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இத்துடன் உங்களுக்கு இலவச நன்மைகளாக வரம்பற்ற பாடல் தேர்வு விருப்பத்துடன் இலவச PRBT மற்றும் லோக்துன் உள்ளடக்கத்திற்கான அணுகல் கிடைக்கிறது. இந்த ஒட்டுமொத்த தொகுப்பும் உங்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. மேல் கூறப்பட்ட அனைத்து நன்மைகளும் இந்த தொகுப்பில் அடங்கும். இத்துடன், இது ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைக்கான 365 நாள் சந்தாவையும் உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சேவைகள் அனைத்தும் ஒரு வருடத்திற்கு வெறும் ரூ. 1999 விலையின் கீழ் கிடைக்கிறது.

ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?

ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?

BSNL வழங்கும் ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றிப் பார்க்கையில், இந்த திட்டம் உங்களுக்கு 24 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற தொலைப்பேசி அழைப்புகளுக்கான நன்மை மற்றும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் என்று பல நன்மைகளை உள்ளடக்கி அதன் செல்லுபடியாகும் காலம் முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்து உங்களின் மொபைல் எண்ணை முழு பயன்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானது.

425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதுமா?

425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதுமா?

அடுத்தபடியாக நாம் பார்க்கப்போகும் திட்டம் இந்திய மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்த திட்டங்களில் ஒரு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் ஒட்டுமொத்தமாக 425 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ரூ. 2,500 விலையில் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கிடைக்கிறது. BSNL இதேபோல் மற்றொரு விருப்பத்தையும் கொண்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ. 2,399 விலையில் ஒரு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தைச் சமீபத்தில் 60 நாட்களாக உயர்த்தியது. இதன் மூலம் இந்த திட்டமும் 425 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாக மாறியுள்ளது.

இப்படி கூட ரீசார்ஜ் செய்தால் நேரம் மிச்சம் தானே

இப்படி கூட ரீசார்ஜ் செய்தால் நேரம் மிச்சம் தானே

இந்த BSNL திட்டம் உங்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. முழுமையான டேட்டா பயன்பாட்டிற்குப் பிறகு இதன் வேகம் 80 கேபிபிஎஸ் ஆகக் குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. கூடுதலாக, பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் ஈரோஸ் நவ் உள்ளடக்க அணுகலுடன் எந்த நெட்வொர்க்கிற்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அணுகலையும் வழங்குகிறது. மாதம் தோறும் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு, 425 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு ஆண்டில் ஒரு முறை ரீசார்ஜ் என்ற பழக்கத்திற்கு மாறுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Recharge Plan For 425 Days Validity Is So Unique Check The Other Prepaid Recharge Plan Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X