Home
News

பிஎஸ்என்எல் சிம் இல்லாத செல்போன் சேவை எப்போது தெரியுமா? 4000 பேர் முன்பதிவு.!

இந்த சேவையை பயன்படுத்த இதுவரை 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று பிஎஸ்என்எல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாகக இந்த சேவையை பெற பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதில்லை.

By Prakash S

தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களையும் மற்றும் சலுகைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்தியா முழுவதும் சிம் இல்லாத செல்போன் சேவை தொழில்நுட்பத்தை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல்
தொடங்க உள்ளது.

மேலும இந்த சிம் இல்லாத செல்போன் சேவைக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் விங்ஸ் என்று பெயரிட்டுள்ளது, குறிப்பாக இந்த தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

10 இலக்க எண்கள்

10 இலக்க எண்கள்

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த சேவைக்கு 10 இலக்க எண்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதன்பின்பு இந்த சேவைக்கான ஆப் வசதியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்:

கட்டணம்:

இந்த சேவைக்கான பதிவுக் கட்டனம் ரூ.1099 நிர்ணயம் செய்யப்பட்டுள்து, குறிப்பாக இந்த கட்டணத்தை செலுத்தினால் தான் 10 இலக்க எண்கள் வழங்கப்படும். இந்த சேவையைக் கொண்டு வேறு எந்த நெட்வொர்க்கிற்கும் பேசமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. குறிப்பாக வைபை இணைப்பு மற்றும் செல்போன் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கு வேண்டுமெனாலும் பேச முடியும்.

சிக்னல்

சிக்னல்

மேலும் இந்த சேலை மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட இந்தியாவிற்கு எவ்வித கட்டணம் இன்றி பேச முடியும் என்று கூறப்படுகிறது.
பின்பு இந்த தொழில்நுட்பம் மூலம் சிக்னல் மிக மோசமாக இருக்கும் பகுதியில் கூட அருமையாக பேச முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைபை வசதி

வைபை வசதி

குறிப்பாக இந்த சேவை வெளிநாட்டில் வசிக்க கூடியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் இருக்கும் வைபை வசதி மூலம் தடையின்றி இந்த
சேவையை பயன்படுத்த முடியும்.

4000 பேர் முன்பதிவு

4000 பேர் முன்பதிவு

இந்த சேவையை பயன்படுத்த இதுவரை 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று பிஎஸ்என்எல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சேவையை பெற பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதில்லை, எந்த நெட்வொர்க்
வைத்திருந்தாலும் பதிவு செய்யும் முடியும். குறிப்பாக இன்டர்நெட் புரோட்டோகால் மூலம் இந்த சேவை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL receives over 4,000 bookings for ‘Wings’ internet telephony service : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X