ரூ.74/- முதல் அறிமுகமாகியுள்ள பிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி திட்டங்கள்.!
அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் வருகிற ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு அதன் புதிய சலுகையொன்றை அறிமுகம் செய்துள்ளது.
புயலுக்கு பின் அமைதி என்ற பழமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்திய தொலைத்தொடர்பு துறைக்கு மிக கட்சிதமாக பொருந்துகிறது. ரிலையன்ஸ் ஜியோ என்ற அதிரடி புயலின் தாக்கத்திற்கு பின்னர், இதர இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பிய வண்ணம் உள்ளன.
இந்த துறையுள் ஏற்பட்டுள்ள மாபெரும் இழப்புகளின் காரணமாக, குறைவான கட்டணங்கள் மற்றும் இலவச சலுகைகள் வரும் காலங்களில் மெல்ல மெல்ல குறைக்கப்படுமென்று சமீபத்திய டெலிகாம் துறை சார்ந்த ஆய்வொன்று கூறுவது ஒருபக்கமிருக்க மறுபக்கம் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் வருகிற ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு அதன் புதிய சலுகையொன்றை அறிமுகம் செய்துள்ளது.

வரம்பற்ற-ஆன் நெட் அழைப்புகள்
ரூ.74/-க்கு அறிமுககமாகியுள்ள இந்த புதிய 'ராக்கி பே சாகுட்' ரீசார்ஜ் திட்டம் ஒரு குறுகிய காலம் செல்லுபடியாகும் திட்டமாகும். வரம்பற்ற-ஆன் நெட் அழைப்புகள், டால்க் வேல்யூ மற்றும் தரவு நன்மைகள் ஆகியவற்றை பெற விரும்பும் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

1ஜிபி அளவிலான தரவு
இந்த ரூ.74/- திட்டமானது ஐந்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ஆனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும், பயனர்கள் அந்த ஐந்து நாட்களுக்கு 1ஜிபி அளவிலான தரவு நன்மையையும் பெறுகின்றனர்.

ஆகஸ்ட் 3 (இன்று முதல்)
பண்டிகையை நாட்களில் இத்தகைய மலிவான கட்டண திட்டங்களை பிஎஸ்என்எல் வழங்கும் என்பது ஒரு வகையான பாரம்பரியமாகவே மாறிவிட்ட இந்த வாய்ப்பை ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் (இன்று முதல்) தொடங்கி வரும் 12 நாட்களுக்கு பெறலாம்.

கூடுதல் காம்போ திட்டங்கள்
இந்த திட்டத்துடன் கூடுதலாக சில காம்போ திட்டங்களும் - ரூ.189, ரூ.289, மற்றும் ரூ.389 - கிடைக்கின்றன மற்றும் இந்த திட்டங்கள் 18 சதவீதம் கூடுதல் பேச்சு மதிப்பு மற்றும் 1ஜிபி இலவச தரவு வழங்குகிறது.

60 நாட்களுக்கு செல்லுபடியாகும்
பிஎஸ்என்எல், அண்மையில் 120ஜிபி டேட்டா வழங்கும் நோக்கில் அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கான 'சிக்ஸர் 666' தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு பயனர்கள் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள் மற்றும் இந்த திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

கூடுதல் தரவு நன்மை
மேலும் ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக, பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கான தரவுத் திட்டமொன்றையும் சமீபத்தில் அறிவித்தது. அந்த புதிய வாய்ப்பின் கீழ், பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் அவர்களின் தற்போதைய திட்டங்களில் கூடுதல் தரவு நன்மைகளை பெற முடியும்.

250எம்பி டூ 2 ஜிபி
பூஜ்ஜிய தரவு நன்மை கொண்டுள்ள பிளான் 99 ரீசார்ஜ் செய்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இப்போது 250 எம்பி அளவிலான தரவை பெறுவார்கள். இதேபோல், 225 ரீசார்ஜ் நிகழ்த்தியவர்கள் 200எம்பி டேட்டாவிற்கு பதிலாக 1ஜிபி அளவிலான தரவை பெறுவார்கள். மற்றும் 325 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் 250எம்பி டேட்டாவிற்கு பதில் 2 ஜிபி தரவை பெறுவார்கள்.

1 ஜிபி டூ 5 ஜிபி
இதேபோல், 525 ரீசார்ஜ் நிகழ்த்தியவர்கள் 500எம்பி டேட்டாவிற்கு பதிலாக 3ஜிபி அளவிலான தரவை பெறுவார்கள். மற்றும் 725 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் 1ஜிபி டேட்டாவிற்கு பதில் 5 ஜிபி தரவை பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications