பிஎஸ்என்எல் பயனர்கள் கவனத்திற்கு: இனி இந்த 2 திட்டங்கள் மட்டுமே கிடைக்கும்.! என்ன காரணம்?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பிஎலஸ்என்எல் சேவையின் கீழ் இருக்கும் பயனர்கள் தேர்வு செய்ய இரண்டு திட்டங்கள் மட்டுமே கிடைக்கும் எனத் தகவல்
வெளிவந்துள்ளது. அதுப் பற்றிய முழுமையான விவரங்களைப் பார்ப்போம்.

 வெளிவந்த தகவலின்படி,

அதாவது அண்மையில் வெளிவந்த தகவலின்படி, ஃபைபர் இன்டர்நெட் சேவையான பாரத் ஃபைபரின் கீழ் சில திட்டங்களை நீக்கியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் பேசிக், ஃபைபர் வேல்யூ, ஃபைபர் பிரீமியம் மற்றும் ஃபைபர் அல்ட்ரா போன்ற திட்டங்களை அறிமுகம் செய்தது.

புதிய திட்டங்களும்

பின்பு பல்வேறு புதிய திட்டங்களும் சேர்க்கப்பட்டன. அதேபோல் பல திட்டங்களும் அகற்றப்பட்டன. தற்போது வெளிவந்த தகவலின்படி, பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாடிக்கையாளர்கள் இனிமேல் ஃபைபர் பேசிக் பிளஸ் மற்றும் ஃபைபர் பிரீமியம் பிளஸ் ஆகிய இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களை மட்டுமே தேர்வுசெய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா...இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.!அடேங்கப்பா...இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.!

ஃபைபர் பேசிக் பிளஸ்

ஃபைபர் பேசிக் பிளஸ்

எனவே பயனர்கள் ஃபைபர் பேசிக் பிளஸ் திட்டத்தை தேர்வு செய்தால் மாதத்திற்கு ரூ.599 பணம் செலுத்த வேண்டும். மேலும் இந்த
திட்டத்தின் சலுகைகளைப் வரிவிகாப் பார்ப்போம். ஃபைபர் பேசிக் பிளஸ் திட்டத்தில் 3.3TB அல்லது 3,300GB டேட்டாவை பெறமுடியும். பின்பு60 Mbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் டேட்டா முழுவதையும் பயன்படுத்திய பின்னர் 2 Mbps வேகத்தின் கீழ் இணைய சேவையை தொடர்ந்து அனுபவிக்கலாம். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஃபைபர் பிரீமியம் பிளஸ்

ஃபைபர் பிரீமியம் பிளஸ்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஃபைபர் பிரீமியம் பிளஸ் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்தால் ரூ.1,277 பணம் செலுத்த வேண்டும். பின்பு இந்த திட்டத்தின் நன்மை என்னவென்றால், 3.3TB அல்லது 3,300GB டேட்டவை பெறமுடியும். பின்பு200 Mbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் டேட்டா முழுவதையும் பயன்படுத்திய பின்னர் கூட 15 Mbps வேகத்தின் கீழ் இணைய சேவையை தொடர்ந்து அனுபவிக்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் நீக்கம் செ

ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நீக்கம் செய்த ஃபைபர் பேசிக் திட்டம் மிகவும் அருமையான திட்டம் ஆகும். அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ.499-ஆக உள்ளது. ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டம் தான் பைபர் பேசிக் திட்டம். இதில் 3.3TB அல்லது 3,300GB டேட்டா கிடைக்கும் பின்பு 30 Mbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஃபைபர் பேசிக் திட்டத்தை நீக்கியது மிகப் பெரிய பின்னடைவு ஆகும்.

ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

மேலும் இப்போது நீக்கப்பட்ட திட்டங்களுக்கு பதிலாக புதிய திட்டங்கள் வருமா என்பதை பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் புதிய திட்டங்கள் வரும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு குறிப்பிட்ட சில காரணங்களால் தான் சில திட்டங்கள் அகற்றப்பட்டு இரண்டு திட்டங்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
BSNL quietly halted some Bharat Fiber broadband plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X