Just In
- 3 hrs ago
மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
- 3 hrs ago
விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!
- 4 hrs ago
மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.! எவ்வளவு வேகத்தில் பயன்படுத்தலாம் தெரியுமா?
- 5 hrs ago
அசைக்க முடியாது: மீண்டும் முதலிடம்- ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி!
Don't Miss
- News
வேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்
- Sports
அவர்களின் உடற்மொழியே சரியில்லை... பிட்ச் மீதான குற்றச்சாட்டு... பதிலடி கொடுத்த கவாஸ்கர்
- Movies
20 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!
- Finance
டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Lifestyle
சத்தான... வாழைத்தண்டு சூப்
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சத்தமில்லாமல் குடியரசு தின சலுகைகளை அறிவித்த பிஎஸ்என்எல்.! இதோ முழுவிவிரம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வரவிருக்கும் 72 வது குடியரசு தினம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில திட்டங்களில் சிறப்பான சலுகைகளை அறிவித்துள்ளது.

அதாவது நீண்டகால ப்ரீபெய்ட் திட்டங்கள் என்று அழைக்கப்படும், ரூ.1,999 (பி.வி 1,999) மற்றும் ரூ.2,399 (பி.வி 2,399) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. மேலும் இப்போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வரவிருக்கும் பண்டிகையை முன்னிட்டு பி.வி 1,999 இன் செல்லுபடியை அதிகரித்துள்ளது. இந்த பி.வி. 1,999 ஆனது வழக்கமாக 365 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. ஆனால் இப்போது கூடுதலாக 21 நாட்கள் என்கிற செல்லுபடி சேர்க்கப்பட்டுள்ளது எனவே ஒட்டுமொத்த செல்லுபடியாகும் காலம் 386 நாட்களாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பி.வி. 2399 ஆனது ஒரு மோசமான திருத்தம் மற்றும் குறிப்பிட்ட சலுகைகளுடன் அனுப்பப்பட்டுள்ளது. இதன் முக்கிய திருத்தம் என்னவென்றால், இதன் செல்லுபடியாகும் காலம் 600 நாட்களில் இருந்து 365 நாட்காளாக குறைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக, பி.வி 2399 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 72 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பி.வி 1,999 மற்றும் பி.வி 2399 திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,999 திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?
பி.வி 1,999 திட்டம் ஆனது செல்லுபடியை 21 நாட்கள் நீட்டித்துள்ளது, இது ஓட்டுமொத்த செல்லுபடியாகும் காலத்தை 386 நாட்களாக மாற்றுகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3 ஜிபி அளவிலான டேட்டா, எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற பாடல் மாற்ற விருப்பத்துடன் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், இரண்டு மாதங்களுக்கு லோக்தூன் கன்டென்ட் மற்றும் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் இலவச சந்தா ஆகியவற்றை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் லோக்தூன் கன்டென்ட் செல்லுபடியானது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் மட்டுமே இருக்கும். குறிப்பாக இந்த விளம்பர சலுகை ஜனவரி 10 முதல் அணுக கிடைக்கும் மற்றும் ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது

ரூ.2399 திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?
பி.வி.2399 திட்டத்தில் செல்லுபடியை குறைத்தாலும் அசத்தலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த திட்டம் எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் இந்தியாவிலுள்ள எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்கும். முன்னதாக, பிஎஸ்என்எல் குரல் அழைப்புகளை ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தினசரி 3 ஜிபி அளவிலான டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பிட்ட வரம்பை அடைந்த பிறகு இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்;எம்எஸ்களை இலவசமாக பெறமுடியும்.
குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச ஈரோஸ் நவ் சந்தா மற்றும் வரம்பற்ற தனிப்பயனாக்கப்பட்ட ரிங்பேக் டோன் நன்மைகள் கிடைக்கும். மேலும் ஈரோஸ் நவ் சந்தா திட்டத்தின் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இது ஒரு விளம்பர சலுகை மற்றும் ஜனவரி 10 முதல் ஜனவரி 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்..
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190