BSNL விசுவாசம்.. தமிழக மக்களுக்கு மட்டும்.. 800GB டேட்டா.. 395 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டத்தின் நன்மை இது?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், எப்போதும் அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களை தனியாக கவனிக்க மறப்பதில்லை. அப்படி அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீது நம்பிக்கை வைத்து நீண்ட கால திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் தமிழக மக்களுக்கு புதிய திட்டத்தை வழங்கியுள்ளது BSNL.
பிஎஸ்என்எல் இன் விசுவாசமான வடிக்கையாளர்களா? அது யாருங்க? என்று சிலர் கேளிக்கையாக கேள்விகளை எழுப்பலாம். என்ன தான் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (VI) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் முன்னிலை வகித்தாலும், இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளில் பறந்து விரிந்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் மட்டுமே திகழ்கிறது.

பிஎஸ்என்எல் தமிழகத்திற்கு வழங்கும் 395 நாள் வேலிடிட்டி திட்டம் (395 days validity plan offered by BSNL for Tamil Nadu):
உண்மையை சொல்ல போனால், ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்கள் எட்ட முடியாத கிராமப்புறம், மலைப்பிரதேசம் போன்ற இடங்களில் பிஎஸ்என்எல் மட்டுமே டவர் வைத்து, இந்திய மக்களை அவர்களுக்கு நெருக்கமான மக்களுடன் இணையச்செய்துள்ளது. தனியார் நிறுவனங்கள் லாபத்திற்காக மட்டும் வேலை பார்த்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் 3ஜி (3G) சேவையாக இருந்தாலும், நாட்டின் ஒவ்வொரு மக்களின் தேவையை அறிந்து, அவர்களையும் தொலைத்தொடர்புடன் இணைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் மதிக்கிறது. குறிப்பாக, பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் இருந்து நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டங்கள் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களை விசுவாசமான பயனர்கள் (BSNL Loyal users) என்று பாராட்டுகிறது. அந்த வகையில், 395 நாள் வேலிடிட்டியுடன் செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் பிரத்தியேகமாக தமிழக மக்களுக்காக மட்டும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நிறுவனம் பிஎஸ்என்எல் பிவி_2399 (BSNL PV_2399) என்ற பெயருடன் வழங்கி வருகிறது. இந்த திட்டம் இப்போது தமிழகத்தில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) நன்மையை வழங்குகிறது. ஏறக்குறைய ஒரு நாளுக்கு தினமும் 2ஜிபி என்ற அளவில் டேட்டா இந்த திட்டத்துடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடி 395 நாட்கள் என்பதனால், இது மொத்தமாக 790GB டேட்டாவை வழங்குகிறது.
விசுவாசமான BSNL தமிழக பயனர்களுக்கு ஏறக்குறைய 800GB டேட்டா:
இந்த டேட்டா நன்மைக்கு பிறகும் பிஎஸ்என்எல் குறைந்த வேகத்துடன் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. ஆகமொத்தம் ஏறக்குறைய 800GB டேட்டா இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. வழக்கமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் போல இது லோக்கல் (Local) மற்றும் எஸ்டிடி (STD) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை (Unlimited voice calls benefits) வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது.
இதில் உங்களுக்கு இலவச ரோமிங் வசதி கிடைக்கிறது. இத்துடன் வாவ் என்டர்டெயின்மென்ட் (WOW Entertainment), ஜிங் மியூசிக் (Zing Music), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), கேம்ஆன் & ஆஸ்ட்ரோடெல் (Gameon & Astrotell), நன்மைகளை வழங்குகிறது. இன்னும் கூடுதலாக சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), லிஸ்டன் போட்காஸ்ட் (Lystn Podcast) நன்மைகளும் கிடைக்கிறது. இது உண்மையில் லாபகரமான பெஸ்ட் திட்டமாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








