BSNL அதிரடி.. கம்மி விலை.. 365 நாள் வேலிடிட்டி.. 600GB டேட்டா.. 1 ஆண்டுக்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் பிளான்..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வடிகையாளர்களுக்கு 365 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (validity) கொண்ட புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் 600GB டேட்டாவுடன் (data), எஸ்எம்எஸ் (SMS) நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால் (calls) நன்மையோடு வருகிறது.
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் விஐ (VI) என்றழைக்கப்படும் வோடபோன்-ஐடியா (Vodafone-Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக திகழும் பொழுது, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் போட்டிக்கு மத்தியில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் நன்மைகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், அதன் திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

BSNL அதிரடி.. விரைவில் 4ஜி மற்றும் 5ஜி சேவை.. 1 வருட வேலிடிட்டியுடன் புது ப்ரீபெய்ட் திட்டம்:
என்ன தான் திருத்தங்களை மேற்கொண்டு, குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கினாலும், ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற தனியார் நிறுவனங்கள் 4ஜி (4G) சேவையை தாண்டி இப்போது 5ஜி (5G) சேவைக்குள் கால் பதித்துவிட்டன. ஆனால், பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி (3G) சேவையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சில வட்டங்களில் மட்டும் பிஎஸ்என்எல் இப்போது அதன் 4ஜி சேவையை சோதனை செய்து வருகிறது.
விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மத்தியில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் எக்ஸ் (X) பக்கம் வழியாக புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் PV 1999 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டம் பற்றி குறிப்பிட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டத்தின் கீழ், இப்போது இந்த புதிய பிஎஸ்என்எல் பிவி 1999 (BSNL PV 1999) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ரூ.1999 என்ற விலையில் பயனர்களுக்கு ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் என்ற அட்டகாச நன்மையை வழங்குகிறது. அதாவது, ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்.

BSNL கம்மி விலையில் வழங்கும் 365 நாள் வேலிடிட்டி.. 600GB டேட்டா:
இதன் நன்மைகள் அனைத்தும் ஒரு வருடம் முழுக்க செல்லுபடியாகும். இந்த பிஎஸ்என்எல் பிவி 1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் (BSNL PV 1999 Prepaid Plan) கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். இந்த திட்டம் உங்களுக்கு பல்க்காக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த டேட்டா நன்மை தினசரி வரம்பு எதுவதும் இல்லாமல், அப்படியே முழுமையாக பயன்படுத்த கிடைக்கிறது.
உங்கள் விருப்பம் போல, இந்த 600GB டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்துடன் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது. இத்துடன் இந்த திட்ட பயனர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Local) மற்றும் எஸ்டிடி (STD) அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வாய்ஸ் கால் நன்மையையும் கிடைக்கிறது.
இது தவிர இந்த பிஎஸ்என்எல் பிவி 1999 ப்ரீபெய்ட் திட்டம் கூடுதல் இலவச நன்மைகளையும் வழங்குகிறது. இதில் உங்களுக்கு இலவச ரோமிங் வசதி கிடைக்கிறது. இத்துடன் வாவ் என்டர்டெயின்மென்ட் (WOW Entertainment), ஜிங் மியூசிக் (Zing Music), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), கேம்ஆன் & ஆஸ்ட்ரோடெல் (Gameon & Astrotell), நன்மைகளை வழங்குகிறது.
இன்னும் கூடுதலாக சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), லிஸ்டன் போட்காஸ்ட் (Lystn Podcast) மற்றும் கேமியம் (Gameium) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் உண்மையில் ஒரு சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








