BSNL: முழுசா 3 மாசத்திற்கு தினமும் 2ஜிபி டேட்டா.. ரூ.500க்கும் குறைந்த விலையில் அட்டகாச திட்டம்..
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து அதன் டரிஃப் திட்டங்களில் சில மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்படி பயனர்கள் தேர்ந்தெடுக்க ஏராளமான திட்டங்கள் கிடைப்பதால், ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகப்படியான திட்டங்கள் கிடைப்பதனால், எந்த திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதே இப்போது நம்மில் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.

முழுசா 3 மாதம் செல்லுபடியாகும் 90 நாள் திட்டம்
அதிலும், மாதம் தோறும் தவறாமல் குறைந்த வேலிடிட்டி உடன் ரீசார்ஜ் செய்பவர்களின் சிக்கலும் இதுவாக தான் இருக்கிறது. எப்போதும், குறைந்த வேலிடிட்டி உடன் ரீசார்ஜ் செய்யும் நபர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக BSNL நிறுவனம் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் பட்டியலில் வைத்துள்ளது. ஆம், நாம் இங்கு பார்க்கப்போகும் திட்டங்கள் உங்களில் சிரமங்களைக் குறைக்கப் போகிறது. காரணம், இவை 90 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களாகும். முழுமையாக 3 மாதத்திற்குச் செல்லுபடியாகும் திட்டம் இது.

90 நாட்களுக்குத் தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, SMS வேண்டுமா?
நீங்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தைக் குறைந்த விலையில் வாங்க விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய இடம் BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) மட்டும் தான். உங்களுக்காக BSNL நிறுவனம் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை தன் வசம் வைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, டேட்டா நன்மை மற்றும் SMS நன்மை போன்ற அனைத்து நன்மைகளையும் மூன்று முழு மாதத்திற்கும் பெறலாம். இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்,

மற்ற நிறுவனங்களிடம் இருக்கும் 84 திட்டம் போல் இல்லை இது
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை அதிக கட்டணத்துடன் மட்டுமே திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும் 90 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL மட்டும் தான் நீங்கள் தேடும் ஒப்பந்தத்தை வழங்குகிறது. சரி, இப்போது நாம் பேசும் இரண்டு திட்டங்களின் நன்மைகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

BSNL ரூ.499 மற்றும் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டங்கள்
90 நாட்கள் வேலிடிட்டியுடன் 500 ரூபாய்க்குள் BSNL வழங்கும் முதல் திட்டம் ரூ.499 திட்டமாகும். இதன் மூலம், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 2 ஜிபி டேட்டா நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளைப் பெறுகிறார்கள். BSNL ட்யூன்களுடன் இணைந்த இலவச Zing சந்தாவும் இதில் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டம் மொத்தம் 90 நாட்களுக்கு சேவை செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் மொத்தமாக 180ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

BSNL ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்
BSNL வழங்கும் இரண்டாவது திட்டத்தின் விலை ரூ. 485 ஆகும். இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பைப் பெறுகிறார்கள். இந்த திட்டமும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. BSNL இன் நெட்வொர்க் கவரேஜ் சிறப்பாக இருக்கும் பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால் இந்த இரண்டு திட்டமும் சிறந்த விருப்பங்களாகும். திட்டங்கள் எவ்வளவு மலிவானதாக இருந்தாலும், சரியான நெட்வொர்க் சேவை இல்லை என்றால், அவை பயனற்றவை.

BSNL 4ஜி சேவை எப்போது அறிமுகம்
பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவையை வெளியிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சமீபத்தில்
வெளியான தகவலின் படி, BSNL இந்த ஆண்டு இறுதிக்குள் பரந்த அளவில் 4ஜி சேவையைப் பல இடங்களில் அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. BSNL 4ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டால், இந்தத் திட்டங்களின் பயன்பாடு நிச்சயம் உயரும். ஏனெனில் 4ஜி உடன் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுடன் BSNL சில கடுமையான போட்டியை எதிர்கொள்ளும்.

BSNL 4ஜி சேவை வெளி வந்தால் என்னவாகும்?
BSNL இன் 4G நெட்வொர்க் சேவைகள் ஆரம்பக் கட்டமாக சில குறிப்பிட்ட முக்கிய மெட்ரோ மற்றும் நகர்ப்புற நகரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட காலமாகப் பின்னடைவில் உள்ள BSNL நிறுவனம் தனது வசம் உள்ள பெரிய சந்தை அளவைக் கொண்டு வேகமாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் அரசுக்கு சொந்தமான நிறுவனம் 4ஜி சேவையை குறைந்த விலையில் வழங்கத் துவங்கினால், டெலிகாம் வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய மாற்றம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications