BSNL கஸ்டமர்களுக்கு குட் நியூஸ்.. நங்கூரம் மாதிரி நச்சுனு இறங்கும் 4ஜி.. அமைச்சர் கொடுத்த அடேங்கப்பா அப்டேட்!
இந்தியாவில், மிகவும் போட்டி நிறைந்த துறைகளில் ஒன்று - தொலைத்தொடர்பு துறை. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு.. தனது சந்தை பங்கை அதிகரிக்க போராடி வருகிறது!
ரூ.47,000 கோடி: இதற்காக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது சில தீவிரமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் இந்நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக கிட்டத்தட்ட ரூ.47,000 கோடி மதிப்பிலான மூலதனச் செலவு (கேபக்ஸ் - Capital Expenditure) திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரின் அப்டேட்: இடிடெலிகாம் (ETTelecom) உடனான உரையாடலில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பிஎஸ்என்எல் ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அதன் உள்நாட்டு 4ஜி உள்கட்டமைப்பை விரைவாக அளவிட உறுதிபூண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.
5ஜி சேவை: பிஎஸ்என்எல் ஏற்கனவே முந்தைய ஆண்டில் அதன் அதிகபட்ச மூலதனமான ரூ.25,000 கோடியை நிறைவு செய்துள்ளது, மேலும் புதிய ரூ.47,000 கோடி முதலீடானது, நாடு முழுவதும் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவுவதை விரைவுபடுத்த உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் இந்த விரிவாக்கம் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் கவரேஜை மேம்படுத்தும், அதே நேரத்தில் எதிர்காலத்தில் வணிக ரீதியான 5ஜி சேவைகளுக்கான அடித்தளத்தை தயார் செய்யும்.
இந்தியாவிற்கு இடம்: பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் நெட்வொர்க்கை உருவாக்க தேர்ந்தெடுத்தன் விளைவாக.. முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இடம்பிடித்து உள்ளதாவும் அமைச்சர் கூறியுள்ளார்.
5ஜி கேப்டிவ் நான்-பப்ளிக் நெட்வொர்க்: பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது டெலிகாம் துறையின் முதல் 5ஜி கேப்டிவ் நான்-பப்ளிக் நெட்வொர்க்கை (5G captive non-public network - CNPN) பயன்படுத்துவதற்காக, நுமாலிகார் ரிஃபைனரி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டடுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்த கூட்டாண்மை பிஎஸ்என்எல்-க்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தனியார் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க உள்நாட்டு உள்கட்டமைப்பை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நெட்வொர்க் பொதுத்துறை நிறுவனத்தின் வளாகத்திற்குள் பயன்படுத்தப்படும் மற்றும் முக்கியமான தொழில்துறை செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 2025 க்குள்: பிஎஸ்என்எல் நிறுவனம் டெல்லியிலும், இந்தியாவின் பிற நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்கு செப்டம்பர் 2025-க்குள் தனது 5ஜி சேவைகளை தொடங்க தயாராகி வருகிறது. 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவுவதற்கான முதல் கட்ட பணியின் ஒரு பகுதியாக, சென்னை (Chennai), போபால் (Bhopal), சண்டிகர் (Chandigarh), டெல்லி (Delhi), ஹைதராபாத் (Hyderabad), ஜெய்ப்பூர் (Jaipur), கொல்கத்தா (Kolkata), லக்னோ (Lucknow) மற்றும் பாட்னாவில் (Patna) 5ஜி தளங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரூ.1 க்கு 4ஜி பிளான்: புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் ஃப்ரீடம் ஆபர் என அழைக்கப்படும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது இதன் விலை ரூ.1 ஆகும். இது 30 நாட்கள் செல்லுபடியாகும். இந்த காலகட்டத்தில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெற முடியும்.
பிஎஸ்என்எல்நிறுவனத்தின் கூற்றுப்படி, டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இருப்பினும், இந்த ரூ.1 திட்டம் புதிய பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். எல்லாவற்றை விட சுவாரசியமாக பிஎஸ்என்எல்-ன் இந்த ஃப்ரீடம் சலுகையை பெறுபவர்களுக்கு பிஎஸ்என்எல் இலவச சிம் கார்டையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








