மிரட்டலான ரூ.59: போகும் போக்கை பார்த்தால் ஒரு பிஎஸ்என்எல் சிம் வாங்கணும் போலயே.!
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ரூ.59/- திட்டத்தை அறிவித்துள்ளது.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ரூ.59/- திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.59/- உடன் போட்டியிடுவது மட்டுமின்றி முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.52/- உடனும் போட்டியிடுகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ.59/-ன் நன்மைகள் என்ன.? செல்லுபடி காலம் என்ன.? ஏர்டெல் மற்றும் ஜியோவின் திட்டங்களுடன் இது எம்மாதிரியான போட்டியை நிகழ்த்தும்.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி 58
அறிமுகமாகியுள்ள பிஎஸ்என்எல்- ன் எஸ்டிவி 58 ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து, 100 எஸ்எம்எஸ் மற்றும் மற்றும் 500எம்பி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடி.!
ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதியில் இருந்து மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டம், இதர தனியார் ஆபரேட்டர்களின் செல்லுபடியோடு மட்டுமின்றி நன்மைகளுடன் போட்டியிடுகிறது.

ரோமிங் அழைப்பு.!
'தி ஓன்லி டிராவல் பேக்' என்று அழைக்கப்படும் பிஎஸ்என்எல் ரூ.58/- ஆனதின் குரல் அழைப்பு நன்மையில் ரோமிங் அழைப்பும் பொருந்தக்கூடியனவாக இருப்பதால், இது உள்நாட்டு சுற்றுலா பயணிகளை நிச்சயம் கவரும் என்பதில் ஐயமில்லை.


எந்த தினசரி வரம்பும் கிடையாது.!
அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.58/-ல் எந்த தினசரி வரம்பும் கிடையாது. எனினும், ரோமிங் அழைப்புகளை பொறுத்தமட்டில் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களுக்கு பொருந்தாது. வாய்ஸ் நன்மையோடு சேர்த்து நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ.!
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.52/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், இதுவும் மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒரு நாளைக்கு 150எம்பி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து நாட்டிலுள்ள எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்க்கும் 70 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்கும்.

பார்தி ஏர்டெல்.!
மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல்-ன் ரூ.59/- ஆனது மொத்தம் 500 எம்பி அளவிலான தரவு, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏழு நாட்களுக்கு ரோமிங் உட்பட எந்தவொரு நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகிய நன்மைகளை வழங்குகிறது. சில பயனர்களுக்கு, இதே திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவொரு ஆரம்பம் தான்.!
மொத்தத்தில், பிஎஸ்என்எல் ரூ.59/- மூலம் தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை வழங்குவதை பார்க்க்கமுடிகிறது. இதுவொரு ஆரம்பம் தான், இன்னும் பல வகையான புதிய திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல தொலைத்தொடர்புத்துறை சார்ந்த அப்டேட்ஸ்களுக்குதமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications