Home
News

BSNL-க்கு வரிசை கட்டி வரும் மக்கள்.. மலிவு விலை.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் தனியார் டெலிகாம் நிறுவனங்களைத் தவிர்த்து தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக மக்கள் இணைந்து வருகின்றனர்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. அடுத்த மாதம் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

BSNL-க்கு வரிசை கட்டி வரும் மக்கள்.. மலிவு விலை.. தினமும் 3ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ வழங்கப்படுகிறது. அதேபோல் Arena மொபைல் கேமிங் சேவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.239 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 249 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் ஒடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

BSNL-க்கு வரிசை கட்டி வரும் மக்கள்.. மலிவு விலை.. தினமும் 3ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 prepaid recharge plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இதில் உள்ளது.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.299 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறைகிறது. அதிக டேட்டா விரும்பும் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 399 prepaid recharge plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். எனவே ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content), ஸிங் மியூசிக் (Zing Music) உள்ளிட்ட பல சலுகைகள் இதில் கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் இந்த திட்டம். அதிக நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் இதில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Prepaid Recharge Plans that Give More Data and Unlimited Calls Under Rs.400: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X