அடேங்கப்பா.! BSNL-ல் இப்படி ஒரு ரீசார்ஜ் திட்டமா? 90 நாளுக்கு கவலை இல்லை.! ஆனா?

|

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் போர்ட்ஃபோலியோவில் பல ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் சரியாக 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது.

BSNL ஆப்பரேட்டரிடம் இருந்து நடுத்தர கால திட்டத்தை விரும்பும் நுகர்வோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். BSNL இடம் இருந்து கிடைக்கும் 90 நாள் திட்டம் என்ன விலையில் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

90 நாள் வேலிடிட்டி உடன் BSNL ரீசார்ஜ் திட்டம்.!

90 நாள் வேலிடிட்டி உடன் BSNL ரீசார்ஜ் திட்டம்.!

தெரியாதவர்களுக்கு, BSNL நிறுவனம் இன்னும் 3ஜி நெட்வொர்க் வேகத்தில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவனம் 4ஜி நெட்வொர்க்கில் செயல்படத் துவங்கவுள்ளது.

உங்களுக்கு 90 நாள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் திட்டத்தைப் பற்றித் தான் இங்குப் பார்க்கப்போகிறோம். ஆனால், டேட்டாவை விரும்பாத நுகர்வோருக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில் இது எந்த டேட்டா பலன்களையும் வழங்காது.

BSNL ரூ. 439 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

BSNL ரூ. 439 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

பிஎஸ்என்எல்லின் 90 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.439 விலையில் கிடைக்கிறது. இந்த BSNL ரூ. 439 திட்டம் இப்போது 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற வாய்ஸ் கால் அழைப்பு நன்மையுடன் வருகிறது. இதைத் தவிர இந்த திட்டம் 300 SMS நன்மையை வழங்குகிறது.

இதைத் தவிர வேறு எந்த நன்மையும் இதில் இல்லை. டேட்டா வேண்டும் என்றால் நீங்கள் டேட்டா வவுச்சர்களை வாங்கிக்கொள்ளலாம்.

1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!

டேட்டா நன்மை இல்லை தான்.. ஆனா? இப்படி டேட்டா வாங்கலாம்.!

டேட்டா நன்மை இல்லை தான்.. ஆனா? இப்படி டேட்டா வாங்கலாம்.!

BSNL மிகவும் மலிவான டேட்டா வவுச்சர்களைக் கொண்டுள்ளது. அதனால், உங்களுக்கு குறைந்த செலவில் தேவைப்படும் டேட்டாவை வவுச்சர் மூலமாக வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.அதிக வேலிடிட்டி எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெஸ்ட்.

ஒருவேளை உங்கள் BSNL சிம் கார்டை நீங்கள் இரண்டாம் விருப்பமாக வைத்திருந்தால், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். ஏனெனில் இது உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளை வழங்குகிறது.

எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

BSNL ரூ. 485 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் அதன் நன்மை

BSNL ரூ. 485 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் அதன் நன்மை

ஒருவேளை உங்கள் பட்ஜெட் சுமார் ரூ. 500 விலை என்றாலோ, அல்லது நடுத்தர காலத் திட்டத்தை நீங்கள் டேட்டா நன்மையோடு வாங்க விரும்பினால், நீங்கள் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.இந்த ரூ. 485 ரீசார்ஜ் திட்டம் 82 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இந்த ரீசார்ஜ் திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. FUP வரம்பிற்குப் பிறகு வேகம் 40 Kbps ஆக குறைகிறது.

இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!

பி.எஸ்.என்.எல் 4ஜி மற்றும் 5ஜி எப்போது அறிமுகம்?

பி.எஸ்.என்.எல் 4ஜி மற்றும் 5ஜி எப்போது அறிமுகம்?

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை நாட்டில் வெளியிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கம் மிகவும் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிஎஸ்என்எல் வரும் 2023 ஆம் ஆண்டில் அதன் 5ஜி சேவையையும் அறிமுகம் செய்யுமென்று உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஆகஸ்ட் 15, 2023 அன்று நிறுவனம் நாட்டில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Prepaid Recharge Plan With 90 Days Validity For Rs 439

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X