தினசரி 3ஜிபி டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி.! இந்த BSNL திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க..
பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன.
பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையை கூட வழங்கவில்லை. 4ஜி சேவை இல்லாதது தான் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மிகப் பெரிய குறை. மற்றபடி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்களுக்கும் அதன் சேவைகளுக்கும் இப்போது கூட நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மிகவும் பிரபலமான திட்டம் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 kbps ஆகக் குறைக்கப்படும். இருந்தபோதிலும் இது ஒரு டேட்டா திட்டமாகும். எனவே அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றிற்கு வேறு ஒரு திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 600ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இதில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 kbps ஆகக் குறைக்கப்படும்
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 30 நாட்களுக்கு ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் சமீபத்தில் தமிழ்நாட்டில் எப்போது பிஎஸ்என்எல் இன் 4ஜி சேவை வழங்கப்படும் என்பது குறித்து பிஎஸ்என்எல் நிறுவன உயர்மட்ட அதிகாரி ஒருவர் பிரபல செய்தி நிறுவனத்திடம் பிரத்யேக தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறிய தகவல் என்னவென்றால், நாடு முழுவதும் 4ஜி சிம் கார்டுகள் வழங்கும் பணிகள், 4ஜி டவர்களை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
குறிப்பாக 4ஜி மென்பொருள் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைய வரும் டிசம்பர் மாதம் வரையில் அவகாசம் தேவைப்படும். அதன்பின்னர் 4ஜி டவர்கள் சோதனை மற்றும் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகளுக்குக் குறைந்தது 6 மாதங்கள் ஆகும். எனவே அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








