கூவி கூவி சலுகையை வழங்கும் BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா.. 84 நாள் வேலிடிட்டி.. இந்த 2 திட்டங்களை விட்றாதீங்க..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி 4ஜி சேவையை இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் வழங்க உள்ளது இந்நிறுவனம். அதேபோல் 5ஜி சேவையும் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர லைவ் டிவி சேனல் மற்றும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் எனப் பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 2025-ல் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் இரண்டு அருமையான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 628 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), ஜிங்க்(Zing) பிஎஸ்என்எல் டியூன் (BSNL Tunes), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இதேபோன்று பட்ஜெட் விலையில் பல அசத்தலான திட்டங்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் மற்றும் சலுகைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்கனவே பல லட்சம் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கிவிட்டால் இதை விட அதிக பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credit: static.vecteezy.com


Click it and Unblock the Notifications








