Home
News

ஒரே BSNL ரீசார்ஜ்.. குறைந்த விலை.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. மிஸ் பண்ணாதீங்க..

ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (vi), ஜியோ (Jio) ஆகிய நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் தான் தினமும் 3ஜிபி டேட்டா தரும் திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் சற்று கம்மி விலையில் தினமும் 3ஜிபி டேட்டா தரும் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த பதிவில் தினமும் 3ஜிபி டேட்டா தரும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL RS 299 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே BSNL ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா.. மிஸ் பண்ணாதீங்க..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல்ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். இதுதவிர ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகள் இதில் உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே BSNL ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா.. மிஸ் பண்ணாதீங்க..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. கூடிய விரைவில் நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை வழங்க உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவையைக் கூட இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
BSNL Prepaid Plans with 3GB Data Daily and Unlimited Offers: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X