இனி எங்கும் BSNL.. இவ்ளோ கம்மி விலைக்கு டெய்லி 3GB டேட்டா, வாய்ஸ், SMS.. இதோ பட்டியல்..
தனியார் டெலிகாம் நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று உயர்வான விலையில் தான் வழங்கி வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் (BSNL) கம்மி விலையில் தினமும் 3ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆரவம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்ன்எல் நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 3ஜிபி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த மூன்று ப்ரீபேய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவையை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications