மலிவு விலையில் 30 நாள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி கொடுக்கும் BSNL திட்டங்கள்..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தற்போது இந்தியாவில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் இன்னும் சில வாரங்களில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் விலை மற்றும் அவற்றின் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 147 Plan) ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 10ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 199 Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை (2GB data benefit) வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.
குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற சலுகைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 247 Plan) மொத்தமாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ (Talk Value) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
அதன்படி பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கிடைக்கும். மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
photo credit: flaticon.com


Click it and Unblock the Notifications