இவ்ளோ தானா? 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. இறங்கி அடித்த BSNL.. விடாதீங்க..
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டிக் கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை மலிவு விலையில் அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல். குறிப்பாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கிவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையை வழங்கவில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளிவந்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.500-க்குள் அதிக நன்மைகளை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் இதுபோன்ற ஒரு திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் நேஷனல் ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 2ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்கள், சேலஞ்சஸ் அரேனா கேமிங் சர்வீஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது . அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் நிறுவனம் வழங்கும் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக மாற்றப்படும்.
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது.
பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இதுதவிர கேமிங் சேவைகள் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களும் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








