ரூ.500 போதும்.. 3ஜிபி டேட்டா.. OTT.. அன்லிமிடெட் சலுகைகள்.. அசத்தும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்..
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதுவும் ஜியோ நிறுவனத்தை விட மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளன.
குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கிவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவை வழங்கும். தற்போது 4ஜி சேவைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.500 க்கு கீழ் அதிக நன்மைகளை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை மற்றும் பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். மேலும் இந்த திட்டத்தில் ரூ.10 டாக்டைம் கூட உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் கிடைக்கும் 50ஜிபி டேட்டாவை பயனரால் ஒரே நேரத்தில் அல்லது 50 நாட்களில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளின் பயன்களையும் பெறமுடியும்.
பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 28நாட்கள் செல்லுபடி, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் 100 நாட்கள் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ட்யூன்களும் தொகுத்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் பயனர்கள் எந்த வரம்பும் இல்லாமல் பாடல்களை கேட்கலாம். இதுதவிர ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை, அரினா மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இதுதவிர EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள்.
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள்.
பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகிய அனைத்து நன்மைகளும் உள்ளது.. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம் ஆனது ஒரு அன்லிமிடெட் காம்போ பிளான் ஆகும். இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா, எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் போன்ற சிறந்த சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டம் ஓடிடி-நன்மைகளை வழங்காது.
பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இதுதவிர கேமிங் சேவைகள் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








