Home
News

ஒரே ரீசார்ஜ்.. இனி 395 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி தரும் BSNL திட்டங்கள்..

ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டியாக தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தற்போது ஒரு வருடம் வேலிடிட்டி இரண்டு அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இங்கே அந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) முன்பு 425 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் வேலிடிட்டி நன்மை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 395 நாள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே BSNL ரீசார்ஜ்..  இனி 395 நாள் வேலிடிட்டி..

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 prepaid plan) மொத்தமாக 600ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம்.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதுவும் தினசரி லிமிட் இல்லாமல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் டேட்டா விரும்பும் பயனர்கள் இந்த ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்வது நல்லது. ஒருவேளை அழைப்பு நன்மைகள் மற்றும் அதிக நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan) ஆனது 336 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஆனால் பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 24ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டம் மூலம் பெறமுடியும். அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவையும் பிஎஸ்என்எல் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL prepaid plans that offer validity of more than one year: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X