BSNL 4ஜி வந்தாச்சு.. தினமும் 3ஜிபி டேட்டா.. மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த திட்டங்கள்.. விட்றாதீங்க..
பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து, மத்திய அரசின் பொதுதுறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) நெட்வொர்க் சேவையைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக இனி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கப்பெறும். அதுவும் புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97500க்கு மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்கள் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
3700 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. பின்பு இந்த செல்போன் கோபுரங்கள் சோலார் மின்சாரம் மூலம் இயக்கப்படவுள்ளன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ள மலிவு விலை திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 225 Prepaid Plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும். அதுவும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications