கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் BSNL-இன் தரமான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 4ஜி சேவைகளை வழங்கும் பணி நடைபெற்று வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

BSNL நிறுவனம்
குறிப்பாக ஜியோ,ஏர்டெல் நிறுவனங்களை விட கம்மி விலையில் அசத்தலான பல ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது BSNL நிறுவனம். இப்போது கம்மி விலை அதிக நன்மைகளை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் தான் இந்த ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட அட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இதுதவிர BSNL ட்யூன்ஸ், சாலேன்ஞ் அரினா கேம்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம்ஸ், லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட சிறப்பான நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.298 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 52 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.அதேபோல் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இதுதவிர EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 உள்ளிட்ட அட்டகாசமான நன்மைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.347 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Arena Mobile Gaming Service உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 80 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான நன்மைகள் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ்,பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது.
மேற்கூறிய நன்மைகளுடன், BSNL நிறுவனம் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications