வாரி கொடுக்கும் BSNL.. கம்மி விலையில் பல்க் டேட்டா + மற்ற எல்லா நன்மைகளும் வேணுமா? இந்தாங்க 4 ரீசார்ஜ்!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் சமீபத்தில் அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் சுதந்திர தினத்தை ஒட்டி ரூ.2999 வருடாந்திர திட்டத்தில் சலுகை வழங்கியுள்ளது. மேலும் இந்த ஜியோ திட்டத்தில் 2.2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
இதுதவிர ஜியோ நிறுவனத்தின் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு ஸ்விக்கியில் ரூ. 249 மதிப்பிலான ஆர்டர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி, ஏஜியோ தளத்தில் ரூ. 999 மதிப்புள்ள தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூ. 200 தள்ளுபடி,இ ரூ. 999-க்கும் அதிக தொகை கொண்ட நெட்மெட்ஸ் ஆர்டர்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி, யாத்ராவில் மேற்கொள்ளப்படும் விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ. 1500 வரை தள்ளுபடி, யாத்ராவில் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும்.

குறிப்பாக ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் ரூ.999 போஸ்பெயிட் திட்டத்தில் சில அசத்தலான சலுகைகளை வழங்கிறது. ஆனால் இந்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் கம்மி விலையில் பல்க் டேட்டா (Bulk Data) ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல்க் டேட்டா திட்டங்களை தேர்வு செய்யும் பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டா நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பல்க் டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெயட் திட்டம் (BSNL Combo 247) ஆனது 50ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் 50ஜிபி டேட்டாவை பயனரால் ஒரே நேரத்தில் அல்லது 50 நாட்களில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 50ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை காலி செய்த பிறகு பயனருக்கான இணைய வேகம் 40 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை போன்ற அசத்தலான சலுகைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்ல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL STV 398) ஆனது மொத்தமாக 120ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இதில் 120ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை காலி செய்த பிறகு பயனருக்கான இணைய வேகம் 40 Kbps ஆகக் குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL WFH 251) ஆனது மொத்தமாக 70ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இது டேட்டா வவுச்சர் ஆகும். மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நோக்கங்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த திட்டத்தில் இலவச ஜிங் மியூசிக் பலன்களையும் பெறமுடியும். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும்.
பிஎஸ்என்எல் ரூ.151 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL WFH 151) ஆனது மொத்தமாக 40ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதுவும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நோக்கங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு திட்டமாகும். அதேபோல் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். பின்பு இதில் இலவச ஜிங் மியூசிக் பலன்களையும் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications








