Home
News

BSNL பக்கம் கூட்டம் குவியுது.. மலிவு விலை.. தினமும் 2GB டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள் தரும் திட்டங்கள்..

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.250-க்கு கீழ் வைத்துள்ள சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும்.

BSNL பக்கம் கூட்டம் குவியுது.. அன்லிமிடெட் சலுகைகள் தரும் திட்டங்கள்..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். ஒரு மாதம் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 62ஜிபி வரை டேட்டாவை பெற முடியும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice)

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ வழங்கப்படுகிறது. பின்பு ரூ.239 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 prepaid recharge plan) தினசரி 2ஜிபி டேட்டாவை (2GB data benefit) வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது. மேலும் தினமும் இலவசமாக 100 எஸ்எம்எஸ் (sms) நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 187 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

BSNL பக்கம் கூட்டம் குவியுது.. அன்லிமிடெட் சலுகைகள் தரும் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 147 prepaid plan) 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 10ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.

அதேபோல் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பயனர்கள் பிஎஸ்எனஎல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்தால் இன்னும் அதிக பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo credit: purepng.com

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL prepaid plans that offer 2GB data and unlimited calling benefits per day under Rs 250: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X