வெறும் ரூ.199 முதல் ரூ.997 வரை.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசரவைக்கும் BSNL.. விட்றாதீங்க..
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி அதிரவைத்தது. ஆனால் பிஎஸ்எனஎல் (BSNL) நிறுவனம் இப்போதும் கூட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். அந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை (2GB data benefit) வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை உள்ளது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் இலவசமாக 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற சலுகைகள் இதில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 229 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எஎல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அரினா கேம்ஸ் (Arena Games) சேவையை இந்த திட்டம் மூலம் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 666 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 105 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி வரை டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது.

அதன்படி கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell) சேவையை வழங்குகிறது பிஎஸ்என்எஎல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எஎல் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 160 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக 320ஜிபி டேட்டா நன்மை இதில் உள்ளது. பின்பு வரம்பற்ற அழைப்பு, தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








