வெறும் ரூ.200க்கு கீழ் அள்ளி கொடுக்கும் BSNL.. தினமும் 2GB டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. யாரு விடுவா?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் இந்நிறுவனம் ரூ.200க்கு கீழ் அதிக நன்மைகளைத் தரும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan) ஆனது 30 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதைக் கவனத்தில் கொள்க.
பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 197 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கிடைக்கிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முதல் 15 நாட்களுக்கு மட்டுமே மேலே கூறிய சலுகைகளை வழங்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதாவது இரண்டு மாதங்களுக்கு மேல் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க இந்த திட்டம் பயன்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.153 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 153 Prepaid Plan) மொத்தமாக 26ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.153 திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 147 Prepaid Plan) மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.147 திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
குறிப்பாக தனியார் டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய சேவையை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். எனவே தான் பலர் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








