Home
News

வெறும் ரூ.250-க்குள் அள்ளி தரும் BSNL.. தினமும் 2ஜிபி டேட்டா.. 45 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.250-க்கு கீழ் அதிக நன்மைகளைத் தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம் இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 249 prepaid plan) 45 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

வெறும் ரூ.250-க்குள் அள்ளி தரும் BSNL.. தினமும் 2ஜிபி டேட்டா..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl rs 239 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 62ஜிபி வரை டேட்டாவை பெற முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 228 Prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ.228 திட்டத்தில் வழங்கப்படுகிறது.. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. இந்நிலையில் மீண்டும் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன தனியார் டெலிகாம் நிறுவனங்கள். அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களின் வழங்கி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL prepaid plans offering unlimited benefits under just Rs. 250: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X