வெறும் ரூ.18 முதல்.. டேட்டா, வாய்ஸ் கால்கள்.. அள்ளிக் கொடுக்கும் BSNL பிளான்கள்.. கொஞ்சம் தள்ளி நில்லு ஜியோ..
சோஷியல் மீடியா முழுவதும் தற்போது பிஎஸ்என்எல் (bsnl) தான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்த நாள் முதல் இப்போது வரை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக மக்கள் இணைந்து வருகின்றனர். தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல்.
குறிப்பாக ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் 25 சதவீதம் வரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இன்று வரை பிஎஸ்என்எல் நிறுவனம் எந்தவொரு திட்டங்களின் விலையும் உயர்த்தவில்லை. மலிவு விலையில் தான் இந்நிறுவனம் திட்டங்களை வழங்கி வருகிறது.

அதேபோல் இந்தியாவில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். வரும் மாதங்களில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை உள்ளது இந்நிறுவனம். தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் அடுத்த ஆண்டு 5ஜி சேவையும் கொண்டுவர உள்ளது பிஎஸ்என்எல். சரி இப்போது மலிவு விலையில் கிடைக்கும் சில பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.18 திட்டம் ஆனது 2 நாள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இதுதான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம் ஆனது 14 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வசதியும் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.118 ரீசார்ஜ் திட்டம் ஆனது 20 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது. பின்பு 10ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர ஜிங்க் (Zing), பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.118 ரீசார்ஜ் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.184 ரீசார்ஜ் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 1ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையைப் பெறுகிறது. இத்துடன் உங்களுக்குத் தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ், ஹார்டி கேம்ஸ், அரினா கேம்ஸ், கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல், கேமியம், லிஸ்டன் பாட்காஸ்ட், ஜிங்க் மியூசிக், வாவ் என்டேர்டைன்மெண்ட் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








