கம்மி விலையில் அற்புதமான சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 4ஜி சேவை

4ஜி சேவை

அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட குறைந்த விலை பல அசத்தலான சலுகைகளை வழங்கிவருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

மேலும் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது கம்மி விலையில் அதிகநாள் வேலிடிட்டி உடன் அற்புதமான சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

Apple Watch Ultra டிவைஸை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.! இறுதியில் என்னாச்சு தெரியுமா?Apple Watch Ultra டிவைஸை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.! இறுதியில் என்னாச்சு தெரியுமா?

 பிஎஸ்என்எல் எஸ்டிவி-184

பிஎஸ்என்எல் எஸ்டிவி-184

பிஎஸ்என்எல் எஸ்டிவி-184 எனப்படும் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் கேமிங் நன்மைகள் கிடைக்கும்.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் ட்யூன்கள் இலவசமாக வழங்கப்படும்.

ஒரே நாளில் ரூ.1000 கோடி வசூல், 12 லட்ச ஸ்மார்ட்போன்களை விற்ற Samsung.. என்ன நடக்குது இந்தியாவில்!ஒரே நாளில் ரூ.1000 கோடி வசூல், 12 லட்ச ஸ்மார்ட்போன்களை விற்ற Samsung.. என்ன நடக்குது இந்தியாவில்!

பிஎஸ்என்எல் எஸ்டிவி-399

பிஎஸ்என்எல் எஸ்டிவி-399

பிஎஸ்என்எல் எஸ்டிவி-399 எனப்படும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும்.

மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் லோக்துன் கண்டன்ட் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 எனப்படும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.

குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், Zing மற்றும் Eros Now சந்தா உள்ளிட்டபல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓஹோ., இது இப்படிதான் இருக்குமா?- கேலக்ஸியின் பிரமாண்ட காட்சியை பகிர்ந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி!ஓஹோ., இது இப்படிதான் இருக்குமா?- கேலக்ஸியின் பிரமாண்ட காட்சியை பகிர்ந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி!

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 82 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்

இதுதவிர தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40 Kbps ஆக குறையும்.

இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..

 பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இதுதவிர இலவச Zing சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Prepaid plans offering amazing offers with low cost and long validity!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X