Home
News

BSNL-க்கு கும்பிடு.. பட்ஜெட் விலையில் 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் (airtel), ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களை விட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் 4ஜி சேவை வழங்கும் பணிகளில் உள்ளது. அடுத்த வருடம் பிஎஸ்என்எல் 5ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 300 நாட்களுக்கு மேல் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கே அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

BSNL-க்கு கும்பிடு.. பட்ஜெட் விலையில் 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதைக் கவனத்தில் கொள்க.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைபிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலம் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 1999 prepaid plan) ஆனது மொத்தமாக 600ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம்.

குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக தினசரி லிமிட் இல்லாமல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் டேட்டாவை விரும்பும் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 1499 Prepaid Plan) ஆனது 336 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 24ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

BSNL-க்கு கும்பிடு.. பட்ஜெட் விலையில் 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி!

இதுதவிர பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அழைப்பு நன்மைகளை மட்டும் எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பிளானை தேர்வு செய்வது நல்லது.

தற்போது ரூ.2399, ரூ.1999 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகின்றன. ஒருவேளை பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்துவிட்டால் இன்னும் அதிகமான ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கும்.

photo credit: businesstoday

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL prepaid plans offer validity of over 300 days at budget prices: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X