ஒரே ரீசார்ஜ் 365 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி தரும் BSNL..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஏர்டெல் (airtel), ஜியோ (jio) நிறுவனங்களை விட இப்போதும் கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். எனவே தான் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஒரு வருட வேலிடிட்டி (one year validity) மற்றும் அதிக நன்மைகளை வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது 395 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுவும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 prepaid plan) ஆனது தினசரி டேட்டா இல்லாமல் மொத்தமாக 600ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். குறிப்பாக இந் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் 93,450 4G டவர்கள் நிறுவியுள்ளது. இதை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிப்படுத்தினார். குறிப்பாக 1 லட்சம் டவர்கள் என்ற மைல்கல்லை எட்டிய பிறகு, பிஎஸ்என்எல் மேலும் 4ஜி தளங்களை அமைக்கும்.
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவும் நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கிராமப்புற, நகரப்புற என மொத்தம் 9 கோடிக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் பயனர்கள் பயன் பெறுவார்கள். இந்த இலக்குடன் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. பின்பு இந்த பணிகள் நிறைவடைந்ததும், 4ஜி டவர்கள் விரைவில் 5ஜி சேவைகளை வழங்கும் வகையில் அவற்றின் தரம் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தன்னுடைய நீண்டகால பயனாளர்களுக்கு மேம்பட்ட சேவை மற்றும் சிறந்த மதிப்பளிக்கும் வகையில் தொலைத்தொடர்பு சந்தையில் மீண்டும் தனக்கென ஒரு நிலையைப் பெற்றிட பிஎஸ்என்எல் நிறுவனம் முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








