ரூ.300க்குள் சலுகைகளை அள்ளி வீசும் BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 45 நாள் வேலிடிட்டி..
தனியார் டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்களை மற்றும் சலுகைகளை வழங்கி கொண்டே இருக்கிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது மலிவு விலையில் அதிக நன்மைகள் வழங்கும் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 185 prepaid plan) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 62ஜிபி வரை டேட்டாவை பெற முடியும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.
மேலும் பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan) ஆனது 30 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications