Home
News

ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற தனியார் நிறுவனங்களை விட கம்மி விலையில் அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வி

அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 என்று அழைக்கப்படும் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இதுதவிர Eros Now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி, பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். மேலும் இது இணையதளத்தில் 'டேட்டா வவுச்சரின்' கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. அதேபோல் இந்த ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும் பெறலாம்.

 பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 என்று அழைக்கப்படும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் எந்த OTT சந்தாவையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

 இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Prepaid Plans Available Under Rs.500: Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X