Home
News

ரூ.250-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் குறைவான விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட அதிக சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.250-க்கு கீழ் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 பிஎஸ்என்எல் ரூ.49 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.49 திட்டம்

பிஎஸ்என்எல் STV_49 என்று அழைக்கப்படும் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 100 நிமிட இலவச குரல் அழைப்பு நன்மைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம்

பிஎஸ்என்எல் STV_99 என்று அழைக்கப்படும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். மேலும் இந்நிறுவனம வழங்கும் ரூ.135 (Voice_135 pack) திட்டம் 1440 நிமிட குரல் அழைப்புகளை 24 நாட்களுக்கு வழங்குகிறது.

 பிஎஸ்என்எல் ரூ.118 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.118 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-118 என்று கூறப்படும் ரூ.118 திட்டம் ஆனது 0.5 டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த ரூ.118 திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.

 பிஎஸ்என்எல் ரூ.147  திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம்

பிஎஸ்என்எல் STV_147 என்று கூறப்படும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 10ஜிபி டேட்டா, BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளிட்ட சில நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம் பிஎஸ்என்எல் எஸ்டிவி-185 என்று கூறப்படும் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.187 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.187 விலையில் கிடைக்கும் திட்டம்

பிஎஸ்என்எல் மற்றொரு திட்டம் ரூ.187 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு பலன்களைப் பெறுவீர்கள். பிஎஸ்என்எல் இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம்80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ் மற்றும்EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.

Best Mobiles in India

English summary
BSNL Prepaid Plans Available Under Rs.250: Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X